விஜயகாந்திற்காக இளையராஜா தனது இசையில் மாஸ் காட்டிய 5 படங்கள்
தமிழ் திரையுலகில் இசை என்றால் இளையராஜாதான். 80களில் துவங்கிய அவரது இசை சாம்ராஜ்யம் இன்று வரை தொடர்கிறது. இன்றைய தலைமுறைகள் கூட அவரது இசையை ரசிப்பதே அவருக்கு கிடைத்த அங்கிகாரத்திற்கு சான்று. இளையராஜா விஜய்காந்திற்காக பல படங்கள் இசையமைத்துள்ளார். பல பாடல்கள் ஹிட் ஆகியுள்ளன. சில படங்கள் அவரது பின்னணி இசைக்காகவே வெற்றி பெற்றுள்ளன. அந்த வகையில் விஜய்காந்திற்காக இசையில் மாஸ் காட்டிய 5 படங்களை இங்கே காணலாம்.
- வைதேகி காத்திருந்தாள்
தொடர்ந்து ஆக்சன் ஹீரோவாக வலம் வந்த விஜயகாந்தை ஒரு மாறுபட்ட வேடத்தில் காட்டிய முதல்படம். ஆர்.சுந்தராஜன் இயக்கிய இந்த படத்தின் பாடல்கள் இன்றளவும் டாப் லிஸ்டில் உள்ளது. குறிப்பாக ராசாத்தி உன்னை காணாத நெஞ்சில் என்ற பாடலை முனுமுனுக்காதவர்களே இல்லை எனலாம்.
2.பூந்தோட்ட காவல்காரன்
செந்தில்நாதன் இயக்கிய இந்த படத்தை முதலில் வாங்கவே தயங்கினர் வினியோகஸ்தர்கள்.ஒரு கட்டத்தில் விஜயகாந்தும் ரவுத்தரும் படத்தை கிடப்பில் போட முடிவு செய்தனர். இதனை அறிந்த இளையராஜா இயக்குனரிடம் பிரிண்டை எடுத்து வரச் சொல்லி இசையில் மேஜிக் செய்தார். பின்னர் படத்தை பார்த்த வினியோகஸ்தர்கள் இயக்குனரை கொண்டாடினார்கள். இதனை செந்தில்நாதன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். இப்படத்தின் அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட். குறிப்பாக சிந்திய வெண்மணி பாடல் எவர்க்ரீன் ஹிட்.
- சத்ரியன்
மணிரத்னம் கதை மற்றும் தயாரித்த இப்படத்தை சுபாஷ் இயக்கினார். இப்படத்தில் விஜய்காந்திற்கு பாடல்கள் இல்லை என்றாலும் பின்னணி இசையில் மிரட்டியிருப்பார் இளையராஜா.
- புலன் விசாரணை
ஆர்.கே. செல்வமணி இயக்கியிருந்த இப்படம் அப்போதே ஹாலிவுட் தரத்தில் இருக்கும். அதற்கேற்றார்போல இளையராஜா பின்னணி இசையிலும் ஜாமாய்த்திருப்பார்.
- கேப்டன் பிரபாகரன்
விஜய்காந்த் 100வது படமான கேப்டன் பிரபாகரனிலும் விஜய்காந்திற்காக பாடல்கள் எதுவும் இருக்காது. ஆனால் பின்னணி இசை வேறு விதமாக இருக்கும். விஜய்கந்த் அறிமுக காட்சியில் வரும் இசை அப்போது விஜய்காந்த் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.
இது தவிர சேதுபதி ஐபிஎஸ் உள்ளிட்ட பல படங்களில் பின்னணி இசையால் படம் வெற்றி பெறுவதற்கு துணையாக இருந்திருப்பார் இளையராஜா.
