
Cinema News
ரஜினிக்கு வில்லனா? முடியவே முடியாது…என மறுத்த நடிகர் இவரா? அரசியல் வாழக்கைக்கு அடித்தளமான சம்பவம்…
Published on
ஆரம்பத்தில் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தார் விஜயகாந்த். இவருக்கு 1980ல் ரஜினிகாந்த் நடித்த முரட்டுக்காளை படத்தில் வில்லனாக நடிக்க ஏவிஎம்மில் இருந்து அழைப்பு வந்தது.
நீ இந்த மாதிரி நடிச்சா தொடர்ந்து வில்லனா நடிக்குற வாய்ப்பு தான் வரும். அதனால நீ இந்த வாய்ப்பை ஏத்துக்காத என அவரது நண்பர் கூறினார். அதனால விஜயகாந்தும் மறுத்துவிட்டார்.
Vijayakanth2
அந்த நண்பர் வேறு யாருமல்ல. பின்னாளில் விஜயகாந்தை வைத்து பல வெற்றிப்படங்களைத் தயாரித்த அ.செ.இப்ராகிம் ராவுத்தர் தான். அப்போ விஜயகாந்த் நடிச்ச ஒரு படத்தோட சூட்டிங் நடந்தது. அப்போது ஹீரோயின் வர லேட்டாயிடுச்சு. அந்த நேரத்துல தனக்கு பசி எடுத்ததால விஜயகாந்த் சாப்பிட ஆரம்பிச்சிட்டார்.
அந்த நேரத்துல வந்த தயாரிப்பு நிர்வாகி ஒருவர் ஹீரோயின் இன்னும் வரல. உங்களுக்கு என்ன அவசரம்னு கேட்டாரு. ஆரம்ப கால கட்டங்களில் மட்டும் அல்லாம பல படங்களில் நடிச்சதுக்கு அப்புறமும் இந்த மாதிரி அவமானங்களை சந்திச்சிருக்காரு கேப்டன்.
1983ல் விசு இயக்கத்தில் டௌரி கல்யாணத்தில் நடித்தார். அப்போது மாடியில் இருந்த விஜயகாந்த் தயாரிப்பு நிர்வாகிகளில் ஒருவரிடம் பசிக்குது. சாப்பாடு கொண்டு வாங்கன்னு சொன்னாரு. இவரு பெரிய இவரு…மேல கொண்டு வந்து கொடுக்கணுமான்னு விஜயகாந்த் காது படவே பலர் முன்னிலையில் பேசி கிண்டலடித்தார்.
Dowri kalyanam
இந்த சம்பவங்களை விஜயகாந்த் தனக்கு ஏற்பட்ட அவமானமா எடுத்துக்கல. ஹீரோவான நமக்கே இப்படின்னா கடைநிலை ஊழியர்கள் எவ்ளோ கஷ்டப்படுவாங்கன்னு எண்ணிப்பார்த்தாரு.
இவ்வளவுக்கும் விஜயகாந்த் மதுரை ரைஸ்மில் ஓனர் அழகர்சாமியோட மகன். இவரோட தந்தை காங்கிரஸ்சில் இருந்து 2 தடவை நகரசபை தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காமராஜர், பக்தவச்சலம்னு பெரிய பெரிய தலைவர்களுடன் பழகியவர். ஆரம்பகாலத்துல பள்ளிக்குச் செல்ல மேளதாளத்தோட ஊர்வலமாக சென்றுள்ளார் கேப்டன்.
1984ம் ஆண்டில் மட்டும் 18 படங்கள் நடித்து பெரிய ஹீரோவானார். நூறாவது நாள், நீதி பிழைத்தது, வீட்டுக்கு ஒரு கண்ணகி, வெற்றி, சிவப்பு மல்லி என பல படங்கள் ஹிட். கலைஞர் கையால் விருதும் வாங்கினார். அப்போது மரியாதை இவரைத் தேடி வந்தது. ஆனாலும் எந்த வித பகட்டோ, பந்தாவோ இல்லாம எல்லா ஊழியர்களிடமும் சரிசமமா பழகினார்.
Vijayakanth
ஸ்டார் ஆனதுக்குப் பிறகு தயாரிப்பாளர்களிடம் ஒரே ஒரு நிபந்தனையை விதிச்சாரு. அது என்னன்னா ஹீரோ, ஹீரோயின், அசிஸ்டண்ட், லைட்மேன் என எல்லாருக்கும் ஒரே மாதிரியான உணவு பரிமாறணும்னு சொன்னாரு. தன்னோட பழகியவர்கள் மட்டுமல்லாமல் கடைநிலை ஊழியர்கள் வரை மறக்காமல் அவர்களது பெயரை நினைவில் வைத்து இருப்பார்.
திரைப்படக்கல்லூரி மாணவர்கள் மேல் தனிமரியாதை வைத்திருப்பார். அப்படித்தான் இயக்குனர்கள் ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி ஆகியோரை அறிமுகம் செய்தார். தன்னோட மகன் சண்முகப்பாண்டியன் நடித்த சகாப்தம் படத்தின் இயக்குனர் கூட ஒரு திரைப்படக்கல்லூரி மாணவர் தான்.
vijayakanth, Premalatha
சென்னையில் படப்பிடிப்பு என்றால் ஞாயிற்றுக்கிழமைகளில் கலந்துக்க மாட்டாரு. அன்று தன்னோட ரசிகர்களை சந்திக்கவும், ரத்ததானம் செய்யவும் தான் செலவிட்டார்.
அதுவே அவரது அரசியலுக்கு அடித்தளமானது. புத்தாண்டு, பொங்கல், தீபாவளி என்று பண்டிகை நாள்களில் படப்பிடிப்பில் உள்ளவர்கள் எல்லோருக்கும் பணமும் புத்தாடையும் வாங்குவது அவரோட வாடிக்கை. 10க்கும் மேற்பட்ட விருதுகளைப் பெற்ற இவர் 2001ல் சமூக நற்பணி மற்றும் மனித வள சேவைக்காக தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்டு சிறந்த குடிமகனுக்கான விருதை விஜயகாந்த் பெற்றார்.
Vijay: தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது அவர் ஜனநாயகன் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப்...
Idli kadai: சில சமயம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் நடித்து புதிதாக ரிலீசான திரைப்படத்தை விட அந்த படத்தோடு வெளியான...
Vijay: கரூரில் 41 உயிர்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. ஆனால் விஜய் மீதான விமர்சனம், தாக்குதல் நடந்து கொண்டேதான் இருக்கின்றது....
Kantara 2 : ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியான காந்தாரா திரைப்படம் கன்னடம், தமிழ், தெலுங்கு,...
Manikandan: எந்த சினிமா பின்புலமும் இல்லாமல் தனது திறமையையும், உழைப்பையும் மட்டுமே நம்பி சினிமாவில் நுழைந்து போராடி பல வேலைகளை செய்து...