×

இப்படியும் ஒரு விஜயகாந்த் படமா...அடடா...! என்ன ஒரு படம்..!

 
Vijayakanth

தமிழ் சினிமாவின் பொற்காலம் எது என்று கேட்டால் 1980-2000 வரையான காலகட்டத்தைச் சொல்லலாம். அதிலும் குறிப்பாக 80களில் வெளியான படங்கள் பெரும்பாலும் ஹிட் ரகம்தான். அந்த வரிசையில் 1987-ல் விஜயகாந்த் நடிப்பில் உருவான நினைவே ஒரு சங்கீதம் திரைப்படம் மிகச் சிறந்த படமாக பேசப்பட்ட காலம். அப்போதைய ரசிகர்களை இருக்கையில் கட்டிப்போட்டது. இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது. அது கமல் - ரஜினி என இருவரும் தமிழ்சினிமாவில் கோலூச்சிய காலகட்டம். அந்த நெருக்கடியிலும் நம் புரட்சிக்கலைஞர் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார் என்று சொன்னால் மிகையாகாது.

Vijayakanth

கே.ரங்கராஜ்; இயக்கத்தில் விஜயகாந்த் ராதா, ரேகா ஸ்ரீவித்யா, ராதாரவி, கவுண்டமணி, செந்தில், கோவைசரளா, மற்றும் சேதுவிநாயகம் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜாவின் இன்னிசையில் பாடல்கள் அத்தனையும் தேன் ரகம். 'எடுத்து வச்ச பாலும் விரிச்சு வச்ச பாயும் வீணாகத் தான் போகுது....அந்த வெள்ளி நிலா காயுது" என்ற கிறங்கடிக்கும் பாடல் இந்த படத்தில் தான் இடம்பெற்றது.  'ஏத்தமய்யா ஏத்தம் உனக்கு ரொம்ப ஏத்தமய்யா ஏத்தம்;ää சந்தக்கடை செல்லாயி.... உன் சரக்கு இங்க செல்லாது ஒங்கள ஒண்ணும்; செய்ய மாட்டோம் நாங்க தப்பு எதுவும் பண்ண மாட்டோம், பகலிலே ஒரு நிலவினைக் கண்டேன், அது கருப்பு நிலா...போன்ற பாடல்கள் ரசிகர்களின் நெஞ்சில் இன்றளவும் நீங்கா இடம்பிடித்தவை. அப்போதைய வானொலிகளில் இந்த பாடல்கள் இடம்பெறாத நாளே இல்லை எனச் சொல்லலாம்.

பசும்பொன் கிராமத்தில் விஜயகாந்த்தும் ராதாரவியும் பங்காளிகள். விஜயகாந்தின் முறைப்பெண் ராதா. ராதாரவி ராதாவை பெண் கேட்டு வருகிறார். அதை விஜயகாந்த் தடுக்கிறார். இதற்கிடையில் அவருக்கு ரேகா காலராவைத் தடுக்கும் தடுப்பூசி போடும் டாக்டராக வருகிறார். ராதாவோ விஜயகாந்தை காதலிக்கிறார். ரேகாவின் முதல் திருமணம் நின்று போன சோகக்கதையைக் கேட்ட விஜயகாந்தோ ரேகாவை காதலிக்கிறார். விஷம் குடித்ததாக நாடகமாடி விஜயகாந்தை மணமுடிக்கிறார் ராதா. விஜயகாந்தோ ரேகாவின் நினைவாகவே வாழ்கிறார். 

vijayakanth

இதற்கிடையில் ராதாவிற்கு மூளைக்கட்டி நோய் வருகிறது. விஜயகாந்த் அவருக்காக மனமிறங்கி ராதாவை மனைவியாக ஏற்றுக்கொள்ளும் வேளையில் அவர் உயிர் பிரிகிறது. ரேகா, ராதாரவி என்ன ஆனார்கள் என்பதை வெள்ளித்திரை விளக்கும்.

மருதுபாண்டியாக வாழ்ந்துள்ளார் விஜயகாந்த். என்ன ஒரு டான்ஸ், வசன உச்சரிப்பு, சண்டைக்காட்சி என தனக்கென்று ஒரு பாணியை வடிவமைத்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார் விஜயகாந்த்.       

From around the web

Trending Videos

Tamilnadu News