பிரபல நடிகரின் அப்பா காலில் திடீரென விழுந்த விஜயகாந்த்!.. அதுக்கு அவர் சொன்னது தான் ஹைலைட்!..

0
117

தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட பிரபலங்களை வளர்த்து விட்டவர் நடிகர் விஜயகாந்த். விஜய், சூர்யா என கோலிவுட்டை இன்றளவும் ஆட்சி செய்தவரும் முன்னணி நடிகர்களை ஹீரோக்களாக உருவாக்க விஜயகாந்தின் பங்கு அதிகமாகவே இருந்தது அவர்களும் தமிழ் சினிமா ரசிகர்களும் என்றுமே மறக்க மாட்டனர்.

நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் சினிமா பிரபலங்கள் வாழ்க்கையில் நடந்த சுவாரஸ்ய தருணங்களை பற்றி தொடர்ந்து சில பேட்டிகளில் கூறி வருகிறார். சமீபத்தில் விஜயகாந்த் குறித்த ஒரு சூப்பரான விஷயத்தையும் கூறியுள்ளார்.

பொதுவாகவே நடிகர் விஜயகாந்த் யார் காலிலும் விழும் ஆள் கிடையாது. ஆனால், தயாரிப்பாளர் ஆர்.பி. செளத்ரி சாரை ஒருமுறை அவரது வீட்டுக்கு சந்திக்க சென்றோம், திடீரென விஜயகாந்த் அவரது காலை விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.

வெளியே வந்ததும் குழம்பிப் போய் நின்றிருந்த என்னை பார்த்து, நான் ஏன் அவர் காலில் விழுந்தேன் என்று தெரியுமா? எனக்கேட்ட விஜயகாந்த், அந்த மனுஷன் 600 பேருக்கு சோறு போடுறாரு.. சேட்டு தான், இந்தி படம் எடுக்கலாம்ல. ஆனால், தமிழ் மீது சினிமா மீதும் அவருக்கு இருக்கும் பற்று தான் இங்கே அவர் படம் பண்ண காரணம் அந்த நல்ல மனசுக்காகத்தான் அவர் காலில் விழுந்தேன் என்றார்.

விஜயகாந்த் சொன்னதை கேட்டதும் எனக்கு புல்லரித்துப் போய்விட்டது என பாவா லட்சுமணன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதை சமூக வலைத்தளங்களில் விஜயகாந்த் ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

சூப்பர் குட் பிலிம்ஸ் மூலம் பல வெற்றிப் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் பல குடும்பங்களை வாழ வைத்தவர் ஆர்.பி. செளத்ரி. நடிகர்கள் ஜீவா மற்றும் ஜித்தன் ரமேஷின் தந்தை தான் ஆர்.பி. செளத்ரி. நல்ல மனிதர்களுக்கு விஜயகாந்த் எந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்தார் என்பதை பாவா லட்சுமணன் அழகாக கூறியுள்ளார்.

google news