Categories: Cinema News latest news

“நடிகர்கள் சம்பளத்தை முடிவு செய்றது யார்ன்னு தெரியுமா??”… கம்பீர பதிலால் தூக்கி அடித்த விஜயகாந்த்…

சினிமாத் துறையில் டாப் நடிகர்கள் பலரும் பல கோடி ரூபாய் சம்பளம் வாங்குபவர்கள் என்ற செய்தியை பலரும் அறிவார்கள். நடிகர்களின் மார்க்கெட்டை பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்பட்டாலும், ஒரு திரைப்படத்தின் பட்ஜெட்டில் பெரும்பான்மையான தொகை நடிகரின் சம்பளத்திற்கே போய்விடுவதாக சமீப காலமாக பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

Vijayakanth and Rajinikanth

அதே போல் ஒரு நடிகரின் திரைப்படம் மாஸ் ஹிட் ஆகிவிட்டால் அவர் தனது சம்பளத்தை அதிகமாக நிர்ணயித்துவிடுகிறார் என கூறப்படுகிறது. மேலும் ஒரு நடிகரின் திரைப்படம் சரியாக ஓடவில்லை என்றாலும், சில தயாரிப்பாளர்கள், அந்த நடிகரின் திரைப்படம் ஹிட் ஆகிவிட்டது என வேண்டுமென்று பொய் சொல்கிறார்கள். அந்த பொய்யையும் அந்த நடிகர் நம்பிவிடுவதால் தனது சம்பளத்தை உயர்த்திவிடுகிறார் என ஒரு பேட்டியில் திரையரங்கு உரிமையாளரும் விநியோகஸ்தருமான திருப்பூர் சுப்ரமணியம் கூறியிருந்தார்.

இந்த நிலையில்  நடிகர்கள் சம்பளம் உயர்த்துவது குறித்து நடிகர் விஜயகாந்த் பல ஆண்டுகளுக்கு முன்பு கொடுத்த பேட்டி ஒன்றில் மிகவும் மாறுபட்ட கருத்து ஒன்றை கூறியுள்ளார்.

“முதலில் மக்கள் ஒன்றை புரிந்துகொள்ள வேண்டும். சம்பளம் என்பதை நடிகர்களாகிய நாங்கள் கேட்பது கிடையாது. சம்பளம் நிர்ணயம் செய்வது என்பது வியாபாரத்தை பொறுத்துத்தான்.

இதையும் படிங்க: “துப்பாக்கியால சுட்டு யாருமே சாகல… லைசன்ஸ் ஒன்னுதான் குறைச்சலா??”… ரணகளத்துலயும் கூல் ஆக பதில் சொன்ன நடிகவேள்…

Vijayakanth

உதாரணமாக ஒரு குறிப்பிட்ட ஹீரோவின் படம் நன்றாக ஓடிவிட்டது என்றால், உடனே தயாரிப்பாளர்கள் அந்த ஹீரோவை மொய்த்துவிடுவார்கள். அந்த படம் எதனால் ஓடியது என்பது குறித்தெல்லாம் குறிப்பிட்டு சொல்ல முடியாது.

அந்த ஹீரோவிடம் முதலில் போகும் ஐந்து தயாரிப்பாளர்கள் 50,000 ரூபாய் சம்பளம் பேசுகிறார்கள் என்றால், ஆறாவதாக போகும் தயாரிப்பாளர் 1 லட்சம் சம்பளம் பேசி அந்த நடிகரை புக் செய்துவிடுவார். இவ்வாறு தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களுமே ஹீரோவின் சம்பளத்தை நிர்ணயிக்கிறார்கள்” என்ற ஒரு புதிய கருத்தை விஜயகாந்த் அப்பேட்டியில் கூறியிருக்கிறார்.

Arun Prasad
Published by
Arun Prasad