விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனுடன் கூட்டணி அமைக்கும் விஷால் பட இயக்குநர்!
சண்முக பாண்டியன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. கோலிவுட்டில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்தவர் 'கேப்டன்' விஜயகாந்த்.
இவருடைய மகன் சண்முக பாண்டியனும் 'சகாப்தம்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் என்ட்ரி ஆகி தொடர்ந்து 'மதுரவீரன், படை தலைவன், கொம்புசீவி' ஆகிய படங்களில் நடித்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார்.
தற்போது, சண்முக பாண்டியன் புதிய படமொன்றில் நடிக்க கமிட்டாகியுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்திருக்கிறது. இந்த படத்தை விஷாலின் 'தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன்' போன்ற படங்களை இயக்கிய திரு இயக்கப்போகிறாராம்.
இன்னும் பெயரிடப்படாத இதனை 'கேப்டன் சினி கிரியேஷன்ஸ்' நிறுவனம் சார்பில் எல்.கே.சுதீஷ் தயாரிக்கிறார். இதில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் பணியாற்றவுள்ள தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமாம்.

