Categories: Cinema News latest news

அப்பாவின் ஆசை இது தான்!..எனக்கும் இருந்துச்சு!..விஜயகாந்தின் ஆசையை உடைத்த அதிகாரிகள்!..

தமிழ் சினிமாவின் ஒப்பற்ற கலைஞனாக திகழ்ந்தவர் நடிகரும் கேப்டனுமான விஜயகாந்த். ரஜினி, கமலின் புகழை வெகு சீக்கிரத்தில் பெற்றவர் நம்ம கேப்டன். நிறம் முக்கியமில்லை என்பதற்கு சிறந்த உதாரணமாக இருந்தவர்.

கிட்டத்தட்ட 150க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த விஜயகாந்த் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அரசியலுக்குள் புகுந்தார். அரசியலிலும் மிகச்சிறிய இடைவெளியில் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை குவித்தார். இவரின் உடல் நிலை காரணமாகத்தான் தற்போது விஜயகாந்தால் முன்பு இருந்த நிலையை அடையமுடியவில்லை.

இதையும் படிங்க : ஷங்கரை வளர்த்துவிட்டது நான் தான்… ஆனா எனக்கு உதவி செய்யல… கதறும் பிரபல தயாரிப்பாளர்

சினிமாவிற்கு ஓய்வு எடுத்தாலும் சரி அரசியலில் இவரின் பலம் குறைந்தாலும் சரி மக்கள் மனதில் இன்றளவும் எம்.ஜி.ஆருக்கு இணையான புகழோடு தான் இருக்கிறார். சாதி, சமயம், மதம் பார்க்காத ஒரு உயர்ந்த மனிதனாகவே வாழ்ந்தார். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக விஜயகாந்தை சுற்றி பெரும்பாலும் இஸ்லாமிய நண்பர்கள் தான் இருப்பார்களாம். சாதி வேறுபாடு கருதாமல் பழக்கூடியவராக இருந்திருக்கிறார். ஆகவே தன்னுடைய குடும்பமும் இதை பின்பற்ற வேண்டும் என எண்ணி

தன் மகனுக்கு இஸ்லாமிய பெயரை வைக்க வேண்டும் என்ற ஆசையில் இருந்திருக்கிறார். சௌகத் அலி என பெயர் சூட்டி விழாவும் சிறப்பித்திருக்கிறார். ஆனால் பதிவு செய்யும் போது சில அரசு அதிகாரிகள் ஒரு இந்துவாக இருந்து கொண்டு இஸ்லாமிய பெயரை வைப்பது வருங்காலத்தில் உங்கள் மகனுக்கு தான் சிக்கல், வெளி நாடுகளில் அனுமதிக்கமாட்டார்கள் என கூற அதையும் மறுத்திருக்கிறார் விஜயகாந்த். அவனை வெளிநாடுகளுக்கும் அனுப்ப மாட்டேன் என்றும் அடம்பிடித்தாராம். ஒரு வழியாக அவரை சமாதானம் படுத்தி சண்முக பாண்டியன் என்றே பெயர் மாற்றியிருக்கின்றனர். இந்த சுவாரஸ்ய தகவலை அவரது மகன் சண்முக பாண்டியன் கூறும்போது அவருக்கும் வித்தியாசமான பெயராக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என கூறி ஆதங்கப்பட்டார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini