
Cinema News
தனது படத்தில் ராமராஜனை நடிக்க வைக்க ஆசைப்பட்ட விஜயகாந்த்!.. அட அந்த ஹிட் படமா?!…
Published on
By
ராமராஜன்:
90களில் தமிழ் சினிமாவில் அரை டவுசர் போட்டுக்கொண்டு கதாநாயகனாக அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் ராமராஜன். மக்கள் நாயகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். கிராமத்து கதையில் மட்டுமே நடித்து பல ஹிட் படங்களை கொடுத்தவர். ஒரு கட்டத்தில் ரஜினி, கமல் படங்களுக்கே டஃப் கொடுத்தவர். இவரின் சில படங்களின் வசூல் ரஜினி படத்தையை பீட் செய்தது. குறிப்பாக கரகாட்டக்காரன் படத்தின் வெற்றி திரையுலகையே அசைத்தது.
Ramarajan
ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்:
இவரின் கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் தவம் கிடந்தனர். பல புதிய இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை உருவாக்கியவர் இவர். ஆனால் ஒரு கட்டத்தில் இவருக்கான மார்க்கெட் குறைந்தது. இவரின் படங்கள் தோல்வியை தழுவியது. ஒருபக்கம், அரசியலிலும் தன்னை ஈடுபடுத்திகொண்டார். நடித்தால் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என அவர் அடம்பிடித்ததால் அவருக்கு வாய்ப்புகளும் வரவில்லை.
வானத்தை போல:
விக்ரமின் இயக்கத்தில் விஜயகாந்த், பிரபுதேவா, மீனா, லிவிங்ஸ்டன் உள்ளிட்ட பலரும் நடித்து வெளியான திரைப்படம் ‘வானத்தை போல’. அண்ணன் – தம்பிகளுக்கு இடையே உள்ள பாசத்தை இப்படத்தில் காட்சிகளாக வைத்திருந்தார் விக்ரமன்.
இந்நிலையில், சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய நடிகரும், விஜயகாந்தின் நெருங்கிய நண்பருமான தியாகு ‘ராமராஜன் மீது எனக்கு ஒரு கோபம் உண்டு. ‘வானத்தை போல’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் ராமராஜனை நடிக்க வைக்க விஜயகாந்த் ஆசைப்பட்டார். என்னிடம் ராமராஜனிடம் பேச சொன்னார். ஆனால், நான் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் எனக்கூறி ராமராஜன் நடிக்க மறுத்துவிட்டார். அந்த படத்தில் அவருக்கு நல்ல கதாபாத்திரம். ஆனால், அவர் நடிக்கவில்லை’ என பேசியிருந்தார்.
இதையும் படிங்க: நாட்டுக்கட்ட உடம்பு நச்சின்னு இருக்கு!.. சிக்குன்னு காட்டி இழுக்கும் ரேஷ்மா…
ரஜினி கமல் காம்போ : இந்திய சினிமாவின் அடையாளமாக விளங்குபவர்கள் ரஜினி மற்றும் கமல். 80-களின் காலகட்டத்தில் இருவரும் சேர்ந்து நடிக்க...
Rajasaab: ஏற்கனவே தெலுங்கில் சில படங்களில் நடித்திருந்தாலும் ராஜமவுலி இயக்கிய பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம்...
Kantara Chapter 1: கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து 2022ம் வருடம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற திரைப்படம்...
str 49 : தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரில் ஒருவர் வெற்றிமாறன். இவரின் படங்களில் நடிக்க இந்தியாவின் உள்ள முன்னணி நடிகர்கள்...
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள திரைப்படம் இட்லி கடை. தனுஷ் இயக்கியுள்ள 4வது திரைப்படம் இது. இந்த படத்தில் ராஜ்கிரண், சத்யராஜ்,...