Categories: Cinema News latest news

கல்லூரி மாணவர்களை பந்தாடிய கேப்டன்!.. படப்பிடிப்பில் நடந்த களோபரம்!…

விஜயகாந்த் நடித்து செந்தில்நாதன் இயக்கத்தில் வெளிவந்த படம் பூந்தோட்ட காவல்காரன் திரைப்படம். செந்தில்நாதனுக்கு இதுதான் அறிமுகமான திரைப்படம். இப்ராஹிம் ராவுத்தர் மாதிரியே பிற்காலத்தில் செந்தில்நாதனும் விஜயகாந்துக்கு மிகவும் நெருக்கமான நண்பராக மாறினார்.

இந்த நிலையில் விஜயகாந்த் இன்று தன்னுடைய 71வது பிறந்தநாளை  கொண்டாடும் வகையில் அவரை பற்றிய சில நினைவலைகளை ஒரு பேட்டியின் போது செந்தில்நாதன் பகிர்ந்தார். பூந்தோட்ட காவல்காரன் படத்தில் என் உயிரே என்ற பாடலின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததா.

இதையும் படிங்க: பிரச்சினையை ஊதி ஊதி பெருசாக்கி எப்படியோ ‘ஜெய்லர்’ படத்தை ஓட வச்சுட்டாங்க! அப்போ அதுதான் காரணமா?

அப்போது பின்னாடி ஆடும் டான்சர்கள் குட்டை பாவாடை போட்டுக் கொண்டு  நடனமாடிக் கொண்டிருந்தார்களாம். அதனருகில் ஒரு கல்லூரியும் இருந்ததாம். இந்த டான்சர்களை பார்த்ததும் கல்லூரி மாணவர்கள் திரண்டு வந்து ஓவராக கிண்டலடித்தும் தவறாக பேசியும் வந்திருக்கிறார்கள்.

இதை அந்த டான்சர்கள் விஜயகாந்திடம் சொல்ல அவர் வந்து மாணவர்களை எச்சரித்து அனுப்பினாராம். படப்பிடிப்பு எல்லாம் முடிந்து ஒரு காரில் டிரைவர், இயக்குனர் செந்தில்நாதன், நடிகர் லிவிங்க்ஸ்டன் ஆகியோர் வந்து கொண்டிருந்திருக்கின்றனர். அப்போது தொலைதூரத்தில் சில பேர் கையில் சைக்கிள் செயின் , கம்பு என காத்திருந்தார்களாம்.

ஆனால் அவர்களிடம் இருந்து இவர்களால் தப்பிக்க முடியவில்லையாம். அத்தனை பேரும் சேர்ந்து காரில் வந்த லிவிங்ஸ்டன் உட்பட மூன்று பேரையும் சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். இது தெரிந்து விஜயகாந்த் நேராக போலீஸில் புகார் செய்திருக்கிறார்.

இதையும் படிங்க : ”வருங்கால சூப்பர்ஸ்டார் நான் தான்” பகிரங்கமாக அறிவித்த அஜித்.. இது புது கதையால இருக்கு!

அவர்களும் தாக்குதல் நடத்திய கல்லூரி மாணவர்களை பிடித்து வைத்திருந்தார்களாம். அதன் பிறகு அவர்களின் பெற்றோர்களை வரவழைத்து புத்தி மதி சொல்லி இந்த மாணவர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி அனுப்பி வைத்தாராம் கேப்டன்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini