Categories: Cinema News latest news

என் கூட நடிக்க மாட்டேன்னு விஜயகாந்த் சொல்லிட்டாரு.. நடிகை சொன்னதின் பின்னணி..

Vijayakanth: தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் நடிகராக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். கேப்டன் புரட்சிக் கலைஞர் என அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டவர். அனைவரிடத்திலும் சகஜமாக எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் பழகும் ஒரு உன்னதமான மனிதர் விஜயகாந்த். சினிமாவில் மட்டுமல்ல பொதுவெளியிலும் இவருக்கு என ஒரு தனி மரியாதையே இன்று வரை இருந்து வருகிறது .

ரஜினி கமல் இவர்களைத் தாண்டி விஜயகாந்துக்கு என  ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறார்கள். ஒருவரின் பெருமை அவர் போன பிறகுதான் தெரியும் என்று சொல்வார்கள். அது விஜயகாந்த் வாழ்க்கையில் உண்மையாகி இருக்கிறது. அவர் இருக்கும் வரை யாரும் அவரை கொண்டாடவில்லை. அவர் போன பிறகுதான் அவருடைய பெருமையை கூறி வருகிறார்கள்.

இதையும் படிங்க: SaiPallavi: சாய்பல்லவியின் கிரஷ் யாரு தெரியுமா? அட இவ்ளோ ஓப்பனா சொல்றாங்க.. மனைவிக்கு தெரிஞ்சா?

எம்ஜிஆருக்கு அடுத்து:விஜயகாந்தின் இறப்பிற்கு லட்சக்கணக்கான பேர் வந்து அஞ்சலி செலுத்துவதை பார்க்க முடிந்தது. இதுவரை இல்லாத ஒரு கூட்டம் விஜயகாந்துக்காக கூடியது என்றே சொல்லலாம் .எம்ஜிஆருக்கு அடுத்தபடியாக விஜயகாந்த் இறப்பிற்கு தான் அவ்வளவு கூட்டத்தை பார்க்க முடிந்தது என்றும் பல பேர் கூறினார்கள். எம்ஜிஆரை போல விஜயகாந்த் அண்ணன் தங்கை பாசத்துடனும் சகோதரத்துவத்துடன் பழகுவதில் ஒரு சிறந்த மனிதராக இருந்திருக்கிறார்.

இத்தனை ஆண்டு கால வாழ்க்கையில் இவரைப் பற்றி எந்த ஒரு கிசுகிசுக்களும் வந்ததே இல்லை. நடிகை ராதிகாவை காதலித்தார் என்பதை விட வேறு எந்த பெண்ணோடும் இவரை இணைத்து பேசியதே இல்லை. அந்த அளவுக்கு ஒரு கண்ணியமான நடிகராகவும் இருந்திருக்கிறார் விஜயகாந்த். இந்த நிலையில் பிரபல நடிகை ஊர்வசி விஜயகாந்தை பற்றி சில தகவல்களை பகிர்ந்து இருக்கிறார்.

தங்கச்சியை போய் ஜோடியா?:ஊர்வசியை எப்போதுமே விஜயகாந்த் தங்கச்சி தங்கச்சி என்று தான் அழைப்பாராம். விஜயகாந்துடன் இணைந்து இரண்டே படங்களில் மட்டும் தான் நடித்திருக்கிறாராம் ஊர்வசி. ஊர்வசி ஹீரோயின் என சொன்னதும் முதலில் விஜயகாந்த் நடிக்க மாட்டேன் என சொல்லிவிட்டாராம். தங்கச்சி என அவருடன் பழகி வருகிறேன். எப்படி எனக்கு ஜோடியாக ஊர்வசியை நினைக்க முடியும் என்ற ஒரு காரணத்தினால் தான் விஜயகாந்த் நடிக்க மாட்டேன் என சொல்லி இருக்கிறார்.

urvasi

இதையும் படிங்க: ஜாலி போலீசாக வைப் பண்ணும் கார்த்தி!… வா வாத்தியாரே டீசரே சும்மா தாறுமாறா இருக்கே?!..

அதன் பிறகு அனைவரும் சம்மதிக்க வைத்து படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்கள். அது மட்டுமல்ல படத்தில் நடிக்கும் பொழுது விஜயகாந்த்  ‘அவருடைய கலர் என்ன. என்னுடைய கலர் என்ன .கிட்டவே நிற்க முடியல’ என்றெல்லாம் கலரை வைத்து கிண்டல் பண்ணி பேசுவாராம் விஜயகாந்த். இதை ஒரு பேட்டியில் ஊர்வசி கூறி இருக்கிறார்.

இதே போல் தான் நடிகை நளினியும் சொல்லியிருந்தார். எப்போதுமே விஜயகாந்தை அண்ணன் என்று தான் அழைப்பேன். அவரும் என்னை தங்கை போன்று தான் பாசத்துடன் பழகி வந்தார். அதனாலேயே நாங்கள் நடித்த படங்களில் நெருங்கி நடிக்கிற மாதிரி சீன் இருந்தால் எங்களுக்குள் ஒர்க் அவுட்டே ஆகாது என்று நளினி ஒரு பேட்டியில் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini