×

பேத்தியுடன் வைரலாகும் விஜயகுமார்... இணையத்தை ஈர்த்த புகைப்படம்!

தமிழ் சினிமாவின் பழமை வாய்ந்த குடும்பங்களில் ஒன்று விஜயகுமாரின் குடும்பம். நடிகரான விஜயகுமாருக்கு முத்துக்கண்ணு மற்றும் மஞ்சுளா என்ற இரண்டு மனைவிகளின் மூலம்  கவிதா, அனிதா, வனிதா, ப்ரீதா, ஸ்ரீ தேவி என்ற மூன்று மகள்கள் உள்ளனர். அவரது குடும்பத்தில் உள்ள ஒரே மகன் அருண் விஜய்.

 

இதில் மகள் அனிதாவை தவிர மற்ற அனைவரும் திரைப்படங்களில் நடித்துள்ளனர். விஜயகுமார் வீட்டின் ஒரே பிரச்சனை வனிதா என சொல்லுமளவிற்கு அவர் மட்டும் அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கி சின்னா பின்னமாகி வருகிறார். இதற்க்கிடையில் ஸ்ரீ தேவி , அருண் விஜய் என எல்லோரும் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர்.

வனிதாவின் மூன்றாம் திருமண சர்ச்சைகளுக்கு மத்தியிலும் ஸ்ரீ தேவி தனது மகள் ரூபிக்காவின் பிறந்தநாளை கொண்டிய போட்டோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நடிகர் விஜயகுமார் அனிதாவின் மகளும் பேத்தியுமான தியாவுடன் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைராகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News