Abhinay: அபிநய் ஃபுல்லா குடிப்பார்!.. அவருடன் 4 நாட்கள்!... நடிகை விஜயலட்சுமி பகீர்!...
துள்ளுவதோ இளமை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கியவர் அபிநய். சில படங்களில் ஹீரோவாகவும் நடித்தார். சில படங்களில் கவுரவ வேடங்களில் வந்தார். ஒருபக்கம் நிறைய விளம்பர படங்களிலும் நடித்திருக்கிறார். கடந்த சில வருடங்களாக சரியான வாய்ப்பில்லாமல் கஷ்டப்பட்டு வந்தார். மேலும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர் இரண்டு நாட்களுக்கு முன்பு வீட்டிலேயே மரணம் அடைந்தார்.
இந்நிலையில், இயக்குனர் அகத்தியனின் மகளும், சென்னை 28, அஞ்சாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்தவருமான விஜயலட்சுமி அஸ்வினை பற்றி தனது முகநூல் பக்கத்தில் உருக்கமாக பதிவிட்டிருக்கிறார். அஸ்வினுடன் ஒரு விளம்பர படத்தில் நடித்தேன். டெல்லியில் படப்பிடிப்பு நடந்தது. ஒரு தமிழ் பெண் திருமணமாகி வட மாநிலம் ஒன்றில் குடியேறுவது போலவும் அங்கு தமிழ் தெரியாமல் அவள் மிகவும் கஷ்டப்பட ரேடியோவில் ஒரு தமிழ் பாடல் ஒலிப்பது போலவும். அதைக்கேட்டு அவள் சந்தோஷப்பட்டு கணவருடன் நெருக்கமாவது போலவும் ஒரு அழகான விளம்பரம் அது. 4 நாட்கள் அந்த படப்பிடிப்பு நடந்தது. எனக்கு ஒரு அறையை கொடுத்திருந்தார்கள். திடீரென அதே அறைக்கு அபிநயும் வந்தார். அப்போது நான் ஒருவரை காதலித்துக் கொண்டிருந்தேன். எனவே பயமாக உணர்ந்தேன். ஆனால், அபிநய் சூப்பர் ஜென்டில்மேன்.

இரவில் நான் அறைக்குள் சென்று விடுவேன். அபிநய் ஹாலில் அமர்ந்து மது அருந்துவார். சில மணி நேரங்கள் கழித்து ஜன்னலை திறந்து அவர் என்ன செய்கிறார் என பார்த்தால் அமைதியாக மது அருந்திக் கொண்டிருப்பார். ஒரு ஃபுல் பாட்டிலை குடித்துவிட்டு சரிந்து கிடப்பார். ‘ஒருநாள் ஏன் இப்படி குடிக்கிறீர்கள்?.. விளம்பர உலகில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் இருக்கிறது. ஏன் உடம்பை கெடுத்து கொள்கிறீர்கள்/’ என்று கேட்டேன். அப்போதுதான் குடிப்பதற்கான காரணம், குடும்ப சூழ்நிலை பற்றி இரண்டு மணி நேரம் பேசினார். நானும் அவர் மனதில் இருந்து வலி போகட்டும் என்று நினைத்து அவர் சொன்னதை கேட்டேன்.
விளம்பர ஷூட்டிங் முடிந்து அங்கிருந்து சென்னைக்கு கிளம்பும்போது விமான நிலையத்தில் ‘நன்றி விஜய். என்னிடம் அக்கறையாக யாரும் இப்படி பேசியது இல்லை. இறைவன் உங்களை போன்ற பெண்களையும் படைக்கிறாரா?.. உங்களுக்கு ஒரு தங்கை இருந்தால் சொல்லுங்கள்’ என்றார். நான் வெடித்து சிரித்துவிட்டு அவரை கட்டியணைத்து விடைபெற்றேன். அதுதான் அவரை நான் கடைசியாக சந்தித்தது. இப்போது அவர் மரண செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறேன். ஆனால் அவர் தனது வலிகளில் இருந்து விடுதலையாகி இருப்பார் என்று நம்புகிறேன். அவர் மகிழ்ச்சியாக இருப்பார்’ என்று பதிவிட்டிருக்கிறார் விஜயலட்சுமி.
