×

’மாஸ்டர்’ குட்டிக்கதையை பாடியது விஜய்யா? அனிருத்தா? பரபரப்பு தகவல்!

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ‘ஒரு குட்டிக்கதை’ என்ற பாடல் வரும் காதலர் தினத்தன்று மாலை 5 மணிக்கு வெளியாகவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது

 

இந்த நிலையில் ‘குட்டிக்கதை’ என்று பாடல் தொடங்குவதால் இந்த பாடலை விஜய் தான் பாடியிருக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் பெரும்பாலானோர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மாஸ்டர் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சற்றுமுன் தனது டுவிட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘மாஸ்டர்’ படத்தின் குட்டிக்கதை பாடலை உங்களுக்கு நெருக்கமான ஒருவர் பாடியுள்ளதாக அறிவித்துள்ளது.

ரசிகர்களுக்கு நெருக்கமானவர் என்றால் விஜய்யை தவிர வேறு யார் இருக்க முடியும் என்பதால் இந்த பாடலை விஜய்தான் பாடியுள்ளார் என்று அவரது ரசிகர்கள் அடித்து கூறி வருகின்றனர். இருப்பினும் ஒருசிலர் மட்டும் அனிருத் இந்த பாடலை பாடியிருப்பதாக தெரிவித்து வருகின்றனர். உண்மையில் யார் பாடியுள்ளனர் என்பதை 14ஆம் தேதி வரை பொறுத்திருந்து பார்ப்போம்

From around the web

Trending Videos

Tamilnadu News