கண்ணைக் கட்டிக்கிட்டு டான்ஸ் ஆடிய விஜயகாந்த் மகன்!.. இவருக்கு என்ன தான் ஆச்சு?..

 
vijaya

எல்.கே.சுதீஷ் மகள் திருமண நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் தொடர்ந்து வைரலாகி வரும் நிலையில், தற்போது விஜய பிரபாகரனின் ஹல்தி நடன வீடியோவும் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

மேலும், திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய், மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய அரசியல் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் கலந்துகொண்டனர். முதலமைச்சர் விஜய், பிரேமலதா விஜயகாந்த் மற்றும் அவரது குடும்பத்தினரைச் சந்தித்துப் பேசிய புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.

விஜயகாந்தின் மைத்துனரும் தேமுதிகவின் உறுப்பினருமான எல்.கே. சுதீஷின் மகள் ஜானு ஸ்ரீக்கும், அகில் ரவிக்குமாருக்கும் திருமணம் நடைபெற்றது. அதற்கு முன் நடைபெற்ற ஹல்தி நிகழ்ச்சியில் விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நடனமாடிய வீடியோ தற்போது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அந்த வீடியோவில் விஜய பிரபாகரன் மஞ்சள் நிற உடையணிந்து, கண்களைக் கட்டிக்கொண்டு நடனமாடுவது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. வழக்கமான அரசியல் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விஜய பிரபாகரன் திருமணத்தில் மகிழ்ச்சியுடன் நடனமாடியதையும் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முன்னதாக அவர் திருமண வரவேற்பு மேடையில் நடந்துக் கொண்டதையும் பலரும் கிண்டல் செய்தது குறிப்பிடத்தக்கது.

CR  Desk
CR Desk

7951 Articles

Sivakumar is an experienced digital journalist with 20 years of expertise in online news reporting. He specializes in covering cinema and political news.

Tags

From Around the web