#image_title
கடந்த 5-ம் தேதி வெளியான விஜயின் கோட் படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
லியோ படத்திற்கு பிறகு வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் இசையில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பில் உருவான படம் கோட். இது விஜயின் கடைசி படத்திற்கு முந்தைய படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
குறிப்பாக டைம் டிராவல், சயின்ஸ் பிக்ஷன் என படம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் வெளியாகின. இதையெல்லாம் பார்த்து நடுநிலை ரசிகர்கள் கூட படத்தினை மிகவும் எதிர்பார்த்தனர்.
ஆனால் சின்னச்சின்ன சர்ப்ரைஸ்கள் இருந்தாலும் ஒரு முழுமையான படமாக கோட் திருப்தி அளிக்கவில்லை என ரசிகர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு படத்தின் ரன் டைம் 3 மணி நேரம் 3 நிமிடங்கள் என்பதும் ஒரு முக்கிய காரணம் ஆகும்.
இந்தநிலையில் கோட் படத்தின் ஓடிடி ரன் டைம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இப்படம் 3 மணி நேரம் 40 நிமிடங்கள் வெளியாக உள்ளதாம்.
இதனை படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தெரிவித்து இருக்கிறார். இதை வைத்துப் பார்க்கும்போது 27 நிமிடங்கள் படம் எக்ஸ்ட்ராவாக ஓடிடியில் வெளியாகவுள்ளது.
சமீபகாலமாக ஓடிடியில் வெளியாகும் படங்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக கலாய்க்கப்படுகின்றன. தற்போது படத்தின் ரன்னிங் டைம் அதிகமாக இருப்பதால் கண்டிப்பாக கோட் நெட்டிசன்களிடம் சிக்கி படாதபாடு படப்போகிறது என்பது மட்டும் கண்கூடாகத் தெரிகிறது.
இந்த மாதத்தின் இறுதி அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் கோட் படம் நெட் பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் என்பது தெரிகிறது. அதுவரை நாமும் சற்று காத்திருக்கலாம்.
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…