Connect with us
விஜய்

Cinema News

பிரபாஸை நடிக்க வைக்க போராடிய இயக்குனர்.. நானே இக்கதையில் நடிக்கிறேன் என முன்வந்த விஜய்….

தமிழ் திரையுலகில் மிகப்பெரிய மாஸ் நாயகனாக விஜய் ஒரு கட்டத்தில் நிறைய புதுமுக இயக்குனர்களுக்கு வாய்ப்பு கொடுத்து கொண்டிருந்தார். அப்போது உதவி இயக்குனராக இருந்த ரமணா அறிமுகம் கிடைக்க அவருக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார். அந்த படம் என்ன தெரியுமா?

விஜய்

vijay

தெலுங்கு நடிகரான பிரபாஸிற்கு ஒரு கதையை எழுதி வைத்திருந்தார் இயக்குனர் ரமணா. அப்போது அவர் உதவி இயக்குனராக இருந்த சமயம் மிகவும் கஷ்டத்திலும் இருந்தாராம். ஒருமுறை தன் நண்பரும், இயக்குநருமான ராதா மோகனிடம் பணம் கடன் கேட்டு இருக்கிறார்.

அப்போது அவரும் உதவி இயக்குனராக புதிய கீதை படத்தில் பணிபுரிந்து வந்தார். அங்கு வந்த ரமணாவிடம் விஜய் சாரை அறிமுகம் செய்து வைக்கிறேன். கதை சொல்றீயா எனக் கேட்டாராம். இவரும் யோசனையுடனே சரி என சொன்னாராம்.

விஜய்

thirumalai

ராதாமோகன் விஜயிடம் ரமணாவை அழைத்து சென்று அறிமுகப்படுத்தினார். விஜய் அவரிடம் பேசிவிட்டு உங்க நம்பரை என் மேக்கப் மேனிடம் கொடுத்துவிட்டு செல்லுங்கள். வேண்டும் என்றால் நான் கூப்பிடுகிறேன் எனக் கூறிவிட்டாராம். ரமணாவும் கடமைக்கென நம்பரை கொடுத்துவிட்டு வந்துவிட்டார்.

அவர் நினைக்காத வரையில், இரவே கால் வந்து இருக்கிறது. நாளை ஷூட்டிங் இல்லை. கதை சொல்ல வரமுடியுமா என விஜயே கேட்டு இருக்கிறார். அவர் கண்டிப்பாக வந்துவிடுகிறேன் சார் எனக்கூறி அதுப்போல காலை விஜய் வீட்டில் ஆஜர் ஆகிவிட்டார். அந்த கதைதான் ‘திருமலை’. அங்கு அவர் கதை சொன்ன நாளில் இருந்து அடுத்த பத்தாவது நாள்ல படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. படமும் மாஸ் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Continue Reading

More in Cinema News

To Top