Categories: Cinema News latest news

லியோ அப்டேட் வந்தாச்சு!.. போரை முடிஞ்ச வரை தவிர்க்கும் தளபதி.. லியோ போஸ்டரில் இதை கவனிச்சீங்களா!..

Leo Latest Poster: நடிகர் விஜய்யின் லியோ படத்தில் இருந்து அப்டேட் கிடைக்கவில்லையே என காத்திருந்த ரசிகர்களுக்கு லியோ படத்தின் செகண்ட் சிங்கிள் வரும் என கடந்த சில நாட்களாகவே ரசிகர்கள் காத்திருந்தனர்.

ஆனால், கடைசி வரை லலித் குமார் அப்டேட் தருவதாகவே தெரியவில்லை. இந்நிலையில், ரசிகர்கள் டிரெண்ட் பண்ண பூட்டி வச்சு பூஜை பண்ணு ஹேஷ்டேக்கிற்கு பிறகு தற்போது லியோ பட அப்டேட்களை இனி வரிசையாக வெளியிடுவோம் என அறிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: முழுசா மூடினாலும் மூடேத்த என்னால முடியும்!.. ஒரு சேம்பிள் பார்க்குறியான்னு தலைசுற்ற வைக்கும் தமன்னா!..

இந்நிலையில், ஷார்ப்பா 6 மணிக்கு லியோ படத்தின் லேட்டஸ்ட் போஸ்டர் மற்றும் தெலுங்கு போஸ்டர் வெளியாகி விஜய் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. லியோ படம் பான் இந்தியா படம் எனக் கூறப்பட்டாலும், இந்த முறையும் லியோ தமிழ், தெலுங்கு படமாகவே இருக்கும் என்றே தெரிகிறது.

பனிமலையில் நடிகர் விஜய் தொங்கப்போட்ட தலையுடன் மாணிக்கம் ரஜினியாக அமைதியாக இருப்பது போல போஸ்டர் வெளியாகி உள்ளது. மேலும், அதில், Keep Calm and avoid the Battle என்கிற வாசகம் இடம்பெற்றுள்ளது.

இதையும் படிங்க: ரஜினி பால் போட்டா பேட்டை தூக்கிட்டு ஸ்டம்பை காட்ட மாட்டேன்!.. தலைவர் 171 பற்றி பேசிய கமல்!..

ஒரு பெரிய யுத்தத்தை முடிந்த வரை விஜய் இந்த படத்தில் தவிர்க்கப் போகிறார் என்றும் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாத நிலையில், இறங்கி சண்டை செய்து எதிரிகளை துவம்சம் செய்யப் போவது தான் படத்தின் கதையே என்பது போஸ்டர் மூலம் தெளிவாகிறது.

மேலும், விஜய்யின் சட்டைக்குள் இன்னொரு விஜய் பனி மலையில் ஆக்ரோஷமாக ஓடி வரும் காட்சியையும் டிசைனர் அழகாக ஒளித்து வைத்திருக்கிறார். தனது குடும்பத்தை எதிரிகள் ஏதோ செய்து விட அமைதியாக இருக்கும் விஜய் புயலாய் மாறி புரட்டி எடுக்கப் போகிறார் என்பது தெளிவாக தெரிகிறது என ரசிகர்கள் லியோ படத்தின் புதிய போஸ்டரை வைரலாக்கி வருகின்றனர்.

Saranya M
Published by
Saranya M