Categories: Cinema News latest news

ஓடிடி தளத்தை ஒட்டுமொத்தமாக ஆக்கிரமித்த லியோ!.. ஆல் லேங்குவேஜ்லயும் அண்ணா கில்லிடா!..

லியோ படம் கடந்த 24ம் தேதி நண்பகல் 12.30 மணிக்கு நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான நிலையில், அதன் டாப் 3 இடங்களையுமே லியோ படம் பிடித்து மாஸ் காட்டி வருகிறது.

சமீபத்தில், ஸ்குவிட் கேம் சேலஞ்ச் என ஸ்குவிட் கேம் படத்தின் இரண்டாம் பாகம் போல வெளியான ரியாலிட்டி ஷோ வெப்சீரிஸ் இருந்த இடத்தில் அதை காலி செய்து விட்டு அசால்ட்டாக லியோ முதல் 3 இடங்களை உலகளவில் பிடித்துள்ளது.

இதையும் படிங்க: என்னம்மா இளநீர் மட்டை உறிக்கிறாரு!.. தர்ஷா குப்தாவை பார்த்து தாகம் எடுத்த ரசிகர்கள்!..

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, மன்சூர் அலி கான், சஞ்சய் தத், அர்ஜுன், கெளதம் மேனன், மிஷ்கின், சாண்டி, மடோனா செபாஸ்டியன், பிரியா ஆனந்த், மேத்யூ தாமஸ், ஜார்ஜ் மரியன் உள்ளிட்ட பலர் லியோ படத்தில் நடித்துள்ளனர்.

லியோ படத்தின் ஆரம்ப காட்சியில் வரும் ஹைனா காட்சிகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரிப்பீட் மோடில் கண்டு ரசித்து வருகின்றனர். தியேட்டரில் வெளியாகி இந்த ஆண்டின் அதிக வசூல் ஈட்டிய தமிழ் படமாக லியோ மாறிய நிலையில், தற்போது ஓடிடி தளத்திலும் மாஸ் காட்டி வருகிறது.

இதையும் படிங்க: பருத்திவீரன் படத்துக்கு நீங்களா தயாரிப்பாளர்?.. ஞானவேல் ராஜாவின் நாக்கை பிடுங்கிய சமுத்திரகனி!..

லியோ தமிழ் முதல் இடத்தையும், லியோ தெலுங்கு 2வது இடத்தையும், லியோ இந்தி 3வது இடத்தையும் பிடித்துள்ளது. கூடிய சீக்கிரமே ஜவான் படம் அதிக நேரம் பார்க்கப்பட்ட இந்திய திரைப்படமாக நெட்பிளிக்ஸில் உள்ள நிலையில், அதன் சாதனையை லியோ முறியடித்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Saranya M
Published by
Saranya M