#image_title
தமிழக வெற்றிக் கழகம் கட்சியை இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து இருப்பதால் விஜய் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விஜயின் கட்சி தொடக்கம் இந்தாண்டு நிகழ்ந்துள்ளது. தொடர்ந்து தன்னுடைய கொடி மற்றும் பாடல் ஆகியவற்றை விஜய் ஆகஸ்ட் மாதம் அரங்கேற்றம் செய்தார்.
வருகின்ற 23-ம் தேதி கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற இருக்கிறது. இதற்காக தற்போது விஜய் கட்சியினர் அனுமதி கேட்டு கடிதம் அளித்துள்ளனர்.
என்றாலும் மாநாட்டுக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை. இதற்கிடையில் விஜய் கட்சிக்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கி இருக்கிறது. கோட் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும் அங்கீகாரம் கிடைத்து இருப்பதால் விஜய் மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்தநிலையில் விஜய் படத்துடன் மாணவர்களுக்கு தேவையான பொருட்களை வழங்கி கட்சியினர் வசூல் வேட்டை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதுகுறித்து வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளன.
கோட் படத்தின் ரிலீஸ்க்கு முன்பு ரசிகர்கள் மிகுந்த பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என விஜய் தன்னுடைய கட்சியினருக்கு ஆலோசனை வழங்கி இருந்தார்.
வினோத் இயக்கத்தில் நடிக்கும் அடுத்த படம் தான் விஜயின் கடைசி படமாக இருக்கும் என தெரிகிறது. இந்த விஷயத்தில் உறுதியாக இருக்கும் விஜய் இதேபோல கட்சியினர் வசூல் வேட்டை நடத்துவதையும், கட்சிக்கு கெட்ட பெயர் எற்படுத்துவதையும் தடுக்க வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வீடியோ பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
நடிகரும் தவெக…
TVK Karur:…
Vijay TVK…
ரங்கராஜ் முகத்திரை…
TVK Vijay:…