அஜித்த எப்படியாவது பாத்துடனும்னு வந்தவங்க.. இப்போ எந்த இடத்துல இருக்காங்க தெரியுமா?

by Murugan |   ( Updated:2024-12-15 11:30:23  )
ajith
X

ajith

அஜித்:

தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். அமராவதியில் தொடங்கி இப்போது குட் பேட் அக்லி வரைக்கும் ஒவ்வொரு காலகட்டத்திலும் அஜித்தின் பரிமாணத்தை நம்மால் பார்க்க முடிகிறது. ஒரு ஃபுல் டிரான்ஸ்ஃபர்மேஷன் என்றால் அது அஜித்துக்கு பக்காவாக பொருந்தும். எத்தனை போராட்டங்கள், கஷ்டங்களை இவைகளை கடந்து வந்து இன்று ரசிகர்களின் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கிறார் அஜித்.

நடிகர் என்பதையும் தாண்டி இவரிடம் ஒரு பவர் இருக்கிறது என்றே சொல்லலாம். இதுவே வேற நடிகராக இருந்தால் ரசிகர்கள் கண்டிப்பாக அஜித் மீது கோபத்தைத்தான் கக்குவார்கள். அதாவது வெளியில் வந்து ரசிகர்களை சந்தித்து விட்டு செல்லலாம். அல்லது சமூக வலைதளத்திலாவது ஏதாவது ரசிகர்களுக்காக அறிக்கை விடலாம். உயிரையே வைத்திருக்கும் ரசிகர்களுக்காக எதாவது செய்யலாம்.

வாழு வாழவிடு:

ஆனால் இது எதையும் அஜித் செய்யவில்லை. வாழு வாழவிடு. படத்தை படமாக பாரு. ரசிகராக பாரு. ஒரேடியாக ரசிகராக மட்டும் இருந்து விடாதே. உன் குடும்பத்தையும் உன்னையும் நன்றாக பார்த்துக் கொள் இந்த ஒரு வசனத்தை மட்டும் சொல்லி ரசிகர் பட்டாளத்தை அதிகப்படுத்திக் கொண்டேதான் போகிறார் அஜித். இதுவே அவர் மீது நடிகர் என்பதையும் தாண்டி ஆன்மீகத்திற்கும் அப்பாற்பட்ட மனிதராக காட்டுகிறது.

இந்த நிலையில் அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி படத்தில் இருந்து அஜித்தின் ஒரு புகைப்படம் இன்று இணையத்தில் வெளியாகியிருக்கிறது. அவ்வளவுதான். அவர் புகைப்படத்தை அனைவரும் கொண்டாடி வருகிறார்கள். என் தலைவனுக்கு எந்தவொரு டீ ஏஜிங்கும் தேவைப்படாது என கூறி வருகிறார்கள். அந்தளவுக்கு படு ஸ்லிம்மாக மாறியிருக்கிறார் அஜித். அமர்க்களம் அஜித் இஸ் பேக் என்று டிரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள்.

விஜய்சேதுபதி சூரி:

இதற்கிடையில் அஜித்தை பற்றி விஜய்சேதுபதி மற்றும் சூரி ஆகியோர் கூறிய ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. விஜய்சேதுபதியும் சூரியும் கே.எஸ். ரவிக்குமாருடன் பேசிக் கொண்டிருக்க சூரி ‘வரலாறு, வில்லன் போன்ற படங்களில் நடிக்க உங்களிடம் வாய்ப்பு கேட்டு வந்தேன் சார். பெரிய வரிசையே நின்று கொண்டிருந்தது. நானும் வாய்ப்பு கேட்டு வந்தேன்’ என ரவிக்குமாரிடம் கூறினார்.


விஜய்சேதுபதியும் ‘வரலாறு படம் சமயத்தில்தான் புதுப்பேட்ட படமும் அந்தப் பக்கம் நடந்து கொண்டிருந்தது. பக்கத்துல அஜித் சார் படம் என்று சொன்னதும் அஜித் சாரை பார்க்க ஆசையோடு என் நண்பர்களுடன் அந்த செட்டுக்கு வந்தோம். ஆனால் அஜித் சார பாக்க முடியல. கன்னிகா மேடத்தைத்தான் பார்க்க முடிந்தது’ என விஜய்சேதுபதி ரவிக்குமாரிடம் கூறினார். இப்படி அஜித்தை எப்படியாவது பார்த்துவிடமாட்டோமா என்று இருந்தவர்களை பார்க்க இன்று லட்சக்கணக்கான கூட்டம் காத்துக் கொண்டிருக்கிறது.

Next Story