முதல் வாரமே விஜய்சேதுபதியை டென்ஷனாக்கிய போட்டியாளர்.. மனுஷன் கடுப்பாயிட்டாரு
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளில் மக்களை கவர்ந்த நிகழ்ச்சியாக பார்க்கப்படுவது பிக்பாஸ் நிகழ்ச்சி. ஒன்பதாவது சீசனில் தற்போது பயணித்துக் கொண்டிருக்கிறது. 20 போட்டியாளர்கள் இந்த சீசனில் பங்கேற்றுள்ளனர். பொதுவாக இந்த சீசனை பொறுத்தவரைக்கும் விஜய் டிவி புராடக்ட்ஸ்களைத்தான் உள்ளே இறக்குவார்கள். ஆனால் கடந்த சீசன்களில் இருந்தே பொதுமக்களில் இருந்து ஒருவரை போட்டியாளராக உள்ளே கொண்டு வந்திருக்கின்றனர்.
ஆனால் எல்லா சீசன்களை விட இந்த சீசனில் போட்டியாளர்களை பார்த்ததுமே மக்கள் கடுப்படைந்து விட்டனர். எல்லா பைத்தியங்களையும் கொண்டு வந்து இறக்கியிருக்கிறார்களேஎ என்று விமர்சித்தனர். அதுமட்டுமில்லாமல் ஒரு சில போட்டியாளர்களை பார்த்ததும் சமூகத்திற்கே கேடு என்றெல்லாம் சொல்ல ஆரம்பித்துவிட்டனர். குறிப்பாக வாட்டர் லெமன் திவாகர் முதல் ஆளாக உள்ளே வந்தது அனைவருக்குமே ஆச்சரியம்.
ஏனெனில் அவருடைய காமெடியை பார்த்தே பல பேர் எரிச்சலடைந்து விட்டனர். இதில் 100 நாள் முழுக்க இவர் அக்கப்போறை பார்க்கணுமா என்று நொந்து வருகின்றனர். ஆனாலும் பிக்பாஸுக்கு தற்போது கண்டெண்ட் தருவதே இந்த திவாகர்தான். இன்னொரு போட்டியாளார் கலையரசன். அவர் மீது ஏற்கனவே வயித்தெறிச்சலில் இருக்கிறார்கள் ரசிகர்கள். இருந்தாலும் வெளியில் எனக்கு இருக்கிற அந்த கெட்டப் பெயரை போக்கவே இங்கு வந்திருப்பதாக கலையரசன் தெரிவித்தார்.
இந்த சீசன் ஆரம்பித்து இன்றுடன் ஒருவாரம் முடிவடைகிறது. வார இறுதியில் அனைவருமே பொளக்கப்படும் தருணம் என்பதால் பிக்பாஸ் பார்க்காதவர்கள் கூட வார இறுதியில் பார்த்துவிடுவார்கள். அது கமல் தொகுத்து வழங்கும் போதும் சரி. இப்போது விஜய் சேதுபதி இருக்கும் போதும் சரி. எந்தெந்த போட்டியாளர்களை வச்சு செய்யப் போகிறார்கள் என்பதை பார்க்கவே ஆர்வமாக இருக்கும்.
அந்த வகையில் விஜய் சேதுபதி இன்று நடக்கும் எபிசோடில் ஒரு பெண் போட்டியாளரை கண்டித்திருக்கிறார். அது வேறும் யாருமில்லை. ஆதிரை. இவர் ஏற்கனவே கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த பூர்ணிமாவின் தோழிதான். இந்த வாரம் அனைத்து போட்டியாளர்களை அறிமுகம் செய்ய சொல்கிறார் விஜய்சேதுபதி. ஒவ்வொருவராக எழுந்து நின்று அவர்களின் பெயர்களை கூறி அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.
இதில் ஆதிரை மட்டும் எழுந்து நிற்காமல் கையை தூக்கியவாறு ஆதிரை என அறிமுகப்படுத்திக் கொள்கிறார். உடனே விஜய்சேதுபதி ‘எல்லாரும் எழுந்து நின்று சொல்றாங்க. உங்களால மட்டும் எழுந்திருக்க முடியலயா?’ என கேட்கிறார். அது அவரவர் விருப்பம் என ஆதிரை கூற ‘அவரவர் விருப்பப்படி இருக்க இங்க யாரும் வரல’ என சொல்லி ஆதிரையை நோஸ்கட் செய்து விடுகிறார் விஜய்சேதுபதி. இந்த புரோமோதான் இன்று வெளியாகியிருக்கிறது.
மேற்கொண்டு என்ன நடந்தது என்பதை இன்று இரவு தொலைக்காட்சியில் பார்ப்போம். விஜய்சேதுபதியின் இந்த கருத்தை பல பேர் ஆதரித்தாலும் ஒரு சில பேர் ‘ஆதிரை சொல்வது சரிதானே. அவரவர் விருப்பம்தான். மரியாதை என்பது கேட்டு வாங்கக் கூடாது. தானாக வரவேண்டும். இதற்கு முன் கமல் இருக்கும் நிகழ்ச்சியில் லாஸ்லியா கால்மேல் கால் போட்டுக்கொண்டு உட்கார்ந்திருப்பார். கமல் சாரே ஒன்னும் சொன்னதில்லை.உங்களுக்கு என்ன விஜய்சேதுபதி சார்’ என பதிவிட்டு வருகின்றனர்.
