Categories: Cinema News latest news

விஜய்சேதுபதியை முதலில் தப்பா நினைச்சேன்!.. மேடையில் ஓப்பனாக பேசிய பிரபல நடிகர்..

தமிழ் சினிமாவில் ஒரு நல்ல மனிதராக வலம் வருபவர் நடிகர் விஜய்சேதுபதி. துணை நடிகராக அறிமுகமாகி தன்னுடைய கடும் முயற்சியால் இன்று ஒரு உச்ச நடிகராக வளர்ந்து நிற்கிறார். தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் முதன் முதலில் ஹீரோவாக அறிமுகமானார் விஜய்சேதுபதி.

ஹீரோ என்ற ஒரு பந்தா இல்லாமல் அனைவரிடமும் சகஜமாக பழகக்கூடிய மனிதர் விஜய்சேதுபதி. தான் பட்ட கஷ்டம் யாரும் படக்கூடாது என்பதில் கவனமாக இருப்பவர். அதனால் தான் யாருக்கு என்ன உதவி வேண்டுமோ அதை ஓடிப்போய் செய்யக்கூடிய நல்ல மனிதர் தான் விஜய்சேதுபதி.

எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி அதை முழு மூச்சாக நடித்து மக்களிடையே நல்ல பேரை பெற்றவர். இந்த நிலையில் பிரபல நடிகர் ராஜேஷ் ஒரு மேடையில் விஜய் சேதுபதியை பற்றி மிகவும் வெளிப்படையாக பேசியிருக்கிறார்.

அதாவது ஒரு நடிகரின் உண்மையான குணத்திற்கு ஏற்றவாறு கதையும் அமைந்தால் அந்த படம் கண்டிப்பாக வெற்றியடையும் என்றும் அதை போலத்தான் விஜய்சேதுபதியும். அவர் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் பெரும்பாலும் அவரின் உண்மையான குணங்களே வெளிபட்டன என்று கூறினார்.

மேலும் விஜய்சேதுபதியை முதலில் பார்க்கும் போது அவர் ஒரு ஃபேக்கான மனிதர் என்று ராஜேஷ் நினைத்தாராம். அதன் பின்னர் தான் விஜய்சேதுபதியுடன் பழக பழக அவரின் உண்மையான குணமே தெரிய ஆரம்பித்தது என்று கூறினார். அவரை போல ஒரு வள்ளல், நல்ல உள்ளம் சினிமாவில் யாரும் இல்லை என்று ராஜேஷ் கூறினார்.

இதையும் படிங்க : இளையராஜாவிற்கு உதவியதால் சந்தான பாரதிக்கு ஏற்பட்ட கஷ்டம்… வீட்டுக்கு அனுப்பிய இயக்குனர்!..

Published by
Rohini