Arasan: இந்த முறை மிஸ்ஸே ஆகாது.. ‘அரசன்’ படத்தில் முக்கிய ரோலில் விஜய்சேதுபதி
சிம்பு வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருக்கும் திரைப்படம் அரசன். கோடம்பாக்கத்தில் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படமாக இந்த படம் மாறி இருக்கிறது. இந்த படத்தை கலைப்புலி எஸ் தானு தயாரிக்கிறார். படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார். படத்தின் ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளரான தாணு விஜய் சேதுபதி இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார் என்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். மாநாடு திரைப்படத்திற்கு பிறகு சிம்புவின் மீது ரசிகர்கள் மத்தியில் ஒரு பெரும் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதற்கு ஏற்ப 10 தல, வெந்து தணிந்தது காடு போன்ற திரைப்படங்களில் அவருடைய அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களுக்கு மேலும் நம்பிக்கையூட்டினார் சிம்பு.
அதன்படி அடுத்தடுத்து படங்களில் கமிட்டாக கமலுடன் தக்லைஃப் திரைப்படத்தில் இணைந்தார். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த அளவு ரசிகர்களை ஈர்க்கவில்லை. ஆனால் சிம்புவின் மாசான ஸ்டைலான நடிப்பு அனைவரையும் ஈர்த்தது. ஏற்கனவே சிம்புவின் லைன் அப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஒரு படமும் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் ஒரு படமும் இருக்க திடீரென வெற்றிமாறன் சிம்புவை வைத்து ஒரு படத்தை எடுக்கிறார் என்ற ஒரு புதிய அறிவிப்பு வெளியாகி மேலும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்தது.
அந்த வகையில் அந்தப் படத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி படத்தின் மீதான ஹைப் அதிகமானது. ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படாமலேயே இருக்க ஒரு வேளை இந்த படம் நடக்குமா நடக்காதா? என்ற ஒரு அச்சத்தை ஏற்படுத்தியது. ஆனால் வெற்றிமாறன் தான் கலந்து கொள்ளும் ஒவ்வொரு விழாவிலும் இந்த படம் கண்டிப்பாக நடக்கும் என்று உறுதியாக கூறியிருந்தார்.
வடசென்னை படத்தின் இரண்டாம் பாகமாக இந்த படம் இருக்குமா? என்றும் ஒரு ஆர்வத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது. ஆனால் வடசென்னை யுனிவர்சில் நடக்கும் ஒரு கதையாக இருக்கும் என்று அறிவித்திருக்கிறார் வெற்றிமாறன். இந்த நிலையில் படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக தயாரிப்பாளர் இன்று தன்னுடைய எக்ஸ் வலைதள பக்கத்தில் மனிதன் இணைகிறது மகத்துவம் தெரிகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார்.
ஏற்கனவே விஜய் சேதுபதி வடசென்னை படத்தில் அமீர் ஏற்றிருந்த ராஜன் கதாபாத்திரத்தில் நடிக்க இருந்தார். ஆனால் சில பல காரணங்களால் அந்த படத்தில் அவரால் நடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
