Categories: Cinema News latest news

ஏன்டா திருக்குறள் தானே சொன்னேன்?..தல ரசிகர்களால் கடுப்பாகி போன விஜய் சேதுபதி!..

தமிழ் சினிமாவில் பிஸியாக இருக்கும் பேன் இந்தியா நடிகர்களில் ஒருவராக இருக்கிறார் நடிகர் விஜய்சேதுபதி. இவர் லயோலா கல்லூரியில் நடந்த ஒரு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

மாணவர்களிடையே பேசும் போது கேட்கும் திறனை வளர்த்துக் கொள்வதற்கான முக்கியத்துவத்தை ஒரு திருக்குறளின் மூலம் வெளிப்படுத்த விரும்பிய விஜய் சேதுபதி “செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம் அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை” என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி உரையாற்றினார்.

அப்போது அங்கு கூடியிருந்த மாணவர்கள் திருக்குறளின் கடைசி சீரில் உள்ள தலை என்ற வார்த்தையை மட்டும் எடுத்துக் கொண்டு நடிகர் அஜித்தை பிரபலப்படுத்தும் விதமாக தல தல என்று கத்தியிருக்கின்றனர்.அவர்களின் அறியாமையை நினைத்து தனது விரக்தியை சைகை மூலம் வெளிப்படுத்தினார் விஜய் சேதுபதி.

மேலும் தொடர்ந்து விஜய் சேதுபதி பேசுவதற்கு முன் தான் அப்செட்டாக இருக்கும் விதமான சைகையை வெளிப்படுத்தி வேறு வழியில்லாமல் தன்னுடைய அறிவுரைகளை வழங்கினார். மேலும் நான் மதுவை குடிப்பவன் தான் ஆனாலும் மதுவை பயன்படுத்துவதை எதிர்க்கிறேன் என்றும் கூறினார்.

Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Published by
Rohini