விக்கல்ஸ் விக்ரம் - ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் லைட் வெயிட் பேபி படப்பிடிப்பு நிறைவு
ஸ்டாண்ட் -அப் காமெடியன் மற்றும் பிக்பாஸ் நிகழ்ழ்சி மூலம் அறியப்பட்ட விக்கல்ஸ் விக்ரம் னாயகனாக அறிமுகம் ஆகும் படம் லைட் வெயிட் பேபி. இவரே இப்படத்திற்கான வசனங்களையும் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் நாயகியாக ஃபிட்னஸ் ஸ்பெஷலிஸ்ட் ஆரத்தி கிருஷ்ணா நடிக்கிறார். நகைச்சுவை, உணர்வு பூர்வமான தருணங்களை மையமாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. கே. சி. குரு எழுதி இயக்கியுள்ள இப்படத்தை ஹிதா ஸ்டுடியோஸ் தயாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கடந்த 45 நாட்களாக நடைபெற்ற லைட் வெயிட் பேபி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. இது குறித்து இப்படத்தின் நாயகன் விக்கல்ஸ் விக்ரம் கூற்ரியபோது, எனது திரை பயணத்தில் முதன்முறையாக நாயகனாக நடித்தது மிகவும் உற்சாகமான அனுபவங்களில் ஒன்றாகும். நடிப்பதுடன் வசனங்களையும் எழுதும் வாய்ப்பு கிடைத்தது இந்த பயணத்தை மேலும் சிறப்பானதாக மாற்றியது. கேமராவிற்கு முன்னாலும் ...அதே சமயம் எழுத்து வடிவிலும்... ஒரு கதாபாத்திரத்தை வடிவமைப்பது அரிதான ஒன்று. இந்த அனுபவத்திற்காக ஒட்டுமொத்த குழுவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன் என்று கூறினார்.
இப்படம் இந்த ஆண்டின் பிற்பகுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.
