×

சூர்யாவிற்கு பின் விக்ரம்... வெற்றிமாறன் காட்டுல மழைதான்..
 

பொல்லாதவன், ஆடுகளம், விசாரணை, வட சென்னை என தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியவர் இயக்குனர் வெற்றிமாறன்.
 

தனுஷ் நடிப்பில் இவர் இயக்கிய அசுரன் திரைப்படம் ரூ.100 கோடி வசூலை குவித்ததால் தற்போது முன்னணி ஹீரோக்கள் அனைவரும் அவரின் படத்தில் நடிக்கவிரும்புகின்றனர்.

தற்போது சூரியை வைத்து ஒரு புதிய படத்தில் இயக்கவுள்ளார். அதன்பின் அவர் சூர்யாவை இயக்குகிறார். அப்படம் முடிந்த பின், நடிகர் விக்ரமை வைத்து அவர் ஒரு புதிய படத்தை இயக்கவுள்ளார்.

இந்த செய்தி விக்ரம் ரசிகர்களுக்கு உற்சாத்தை ஏற்படுத்தியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News