'சீயான் 63' படத்தின் ரிலீஸ் தேதியை லாக் செய்த விக்ரம்... கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!
கோலிவுட்டில் பிரபல நடிகராக கெத்து காட்டி வரும் 'சீயான்' விக்ரமுக்கு மிகப் பெரிய ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவர் நடிப்பில் ரெடியாகி வரும் புதிய படம் தான் 'சீயான் 63'.
இந்த படத்தை இயக்குநர் ஆனந்த் ஷங்கர் இயக்கி வருகிறார். ஏற்கனவே, விக்ரம் - ஆனந்த் ஷங்கர் காம்பினேஷனில் 'இருமுகன்' என்ற படம் 2016-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது.
'சீயான் 63' படத்தை 'சத்யஜோதி ஃபிலிம்ஸ்' நிறுவனம் தயாரிக்க, இதில் முக்கிய ரோல்களில் ரியா ஷிபு, VTV கணேஷ், எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி நடிக்கிறார்கள். இந்த படத்துக்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார், ரேமண்ட் டெரிக் க்ராஸ்டா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார்.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்து விட்டதாம். இன்னும் இரண்டு மாதங்களில் மொத்த ஷூட்டிங்கையும் முடித்துவிட்டு, படத்தை இந்த ஆண்டு (2026) கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர். ஒருவேளை அந்த தேதியில் மிஸ்ஸானால், அடுத்த ஆண்டு (2027) பொங்கலுக்கு ரிலீஸ் ஆகுமாம்.
