ps
மணிரத்னம் இயக்கத்தில் தமிழ் சினிமாவையே ஆட்டிப்படைத்த திரைப்படமாக ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படம் அமைந்தது. கல்கியின் நாவலை அடிப்படையாக அமைந்த இந்த திரைப்படம் உலக முழுவதும் மாபெரும் வரவேற்பை பெற்று வசூல் சாதனையை படைத்தது.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியாகி இரண்டாம் பாகம் எப்பொழுது வரும் என்ற எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28 ஆம் தேதி அனைத்து திரையரங்குகளிலும் வெளியாக உள்ளது.
முதல் பாகத்திற்கு எப்படி இசை வெளியீட்டு விழா, புரோமோஷன் விழா என பிரம்மாண்டமாக நடைபெற்றதோ அதே முறையைத்தான் இரண்டாம் பாகத்திலும் படக்குழுவினர் செய்து வருகின்றனர். இரண்டாம் பாகத்திற்கான இசை வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
மேலும் புரோமோஷன்களையும் ஆரம்பித்து இந்தியாவில் உள்ள முக்கிய இடங்களுக்கு சென்று படத்தை பற்றி பேசிவருகின்றனர். படத்தில் சோழர்களாக இருக்கும் விக்ரம், ஜெயம்ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி இவர்கள் தான் பல இடங்களுக்கு சென்று கொண்டிருக்கின்றனர்.
போற இடத்தில் எல்லாம் கலகலப்பாகவும் ஜாலியாகவும் ஏதோ பிக்னிக் போற மாதிரி இவர்கள் சென்று படத்தின் புரோமோஷன் வேலைகளையும் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களுக்காக தனியாக ஒரு சார்ட்டர்டு ஃப்ளைட் ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறது லைக்கா நிறுவனம்..
இதற்கு காரணமே விக்ரம் தானாம். அவர் தான் லைக்கா நிறுவனத்திடம் ‘முதல் பாகம் வெற்றியில் வசூலை அள்ளியிருக்கிறீர்கள், அதனால் தனியாக ஃப்ளைட் ஏற்பாடு செய்து கொடுங்கள்’ என உரிமையோடு கேட்டதாகவும் வெளிப்படையாகவே கேட்டு விட்டார் என்பதால் லைக்கா நிறுவனம் ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் கூறுகிறார்கள். இதற்காக ஒரு கோடியே 60 லட்ச ரூபாய் செலவானதாகவும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : 12 வருடங்களாக இருந்த நட்பை முறித்த இயக்குனர்.. விஜய் சேதுபதி மேல் அப்படி என்ன கோபம்?!..
Rajinikanth: தமிழ்…
Soori: கோலிவுட்டில்…
Vijay: நடிகர்…
Vijay Devarakonda:…
Kantara Chapter…