Categories: Cinema News latest news

முதல் கிஸ் அடிக்கும் போதே வேணாம்னு சொன்னேன்.! வெளியானது விக்ரமின் பெட்ரூம் காட்சி.!

தமிழ் சினிமாவில் நல்ல நடிகராக வலம் வரும் நடிகர் சியான் விக்ரம். ஒரு படத்திற்காக கஷ்டப்பட வேண்டும், உடல் எடையையை ஏற்றி இறக்க வேண்டும் , தோற்றத்தை மற்ற வேண்டும் என என்ன சொன்னாலும், அதெல்லாம் ஒரு விஷயமே இல்லை என மெனெக்கெடுபவர் சியான் விக்ரம்.

விக்ரம் நடிப்பில் கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் மஹான். இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கி இருந்தார். விக்ரம் மகன், துருவ் விக்ரம் சியான் உடன் கிட்டத்தட்ட அவருக்கு இணையாக நடித்து இருந்தார்.

இந்த அப்படத்தில் வாணி போஜன் விக்ரமுக்கு இரண்டாவது நாயகியாக நடித்து இருந்தார். ஆனால், படத்தின் ஷூட்டிங் கொரோனா காரணமாக தள்ளிப்போனதால், ஷூட்டிங் நடத்த முடியாத காரணத்தால், வாணி போஜன் காட்சிகள் கட் செய்யப்பட்டது.

இந்நிலையில், அவ்வப்போது மஹான் நீக்கப்பட்ட காட்சிகளை வெளியிட்டு வரும் மஹான் தயாரிப்பு நிறுவனம் இன்று ஒரு ஹாட் சூப்பர் சீனை வெளியிட்டுள்ளது. அதில் வாணி போஜன் – விக்ரம் இருக்கும் காட்சிகள் தான் அது. அதில் தனது சாராய பிராண்டிற்கு விளம்பர மாடலாக வரும் வாணி போஜனை விக்ரம் கரெக்ட் செய்து விடுகிறார்.

இதையும் படியுங்களேன் – சட்டவிரோத பணப்பரிமாற்றம்.!? விசாரணையில் இயக்குனர் ஷங்கர்.! வெளியான திடுக் தகவல்கள்..,

அவருடன் பெட்ரூம்  காட்சிகள் எல்லாம் இருக்கிறது ( நீங்கள் நினைப்பது இல்லை ) அதில் வாணி போஜன், விக்ரமிடம் , நாம் கல்யாணம் செஞ்சிக்கலாமா ? ‘என கேட்டுவிட, உடனே விக்ரம் மறுத்து, ‘இதெல்லம் முதல் கிஸ் அடிக்கும் போதே  வேணாம்னு சொல்லிருக்கும்’ என பேசி அவரை வெளியே  தள்ளுகிறார்.  இந்த காட்சி உண்மையில் சுவாரஸ்யமாக இருக்கிறது. எப்படியாவது படத்தில் சேர்த்திருக்கலாம் எனரசிகர்கள் வருத்தத்தில் இருக்கின்றனர்.

Manikandan
Published by
Manikandan