Connect with us

Gossips

ஒரு தியேட்டர்.. ஒரே நாள் 100 காட்சி….செம வசூல்.! பேயாட்டம் ஆடும் விக்ரம்.! முழு விவரம் இதோ…

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் தயாராகி கடந்த வாரம் ரிலீசாகி மாபெரும் வெற்றியை படைத்தது வரும் திரைப்படம் விக்ரம். இந்த படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் தீவிர ரசிகர். அதனை படத்தில் அற்புதமாக காட்டியிருந்தார். ஒவ்வொரு காட்சியும் அப்படி இருந்தது.

ஒரு ஃபேன் பாய் திரைப்படம் எப்படி இருக்க வேண்டும் என்பதை இப்படம் காட்டியிருக்கிறது. ஒரு ரசிகரின் இயக்கத்தில் வேட்டையாடு விளையாடு படத்திற்கு பிறகு இந்த திரைப்படம்தான் கமல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.

விக்ரம் திரைப்படம் பல்வேறு திரையரங்குகளில் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. இதுவரை இல்லாத அளவிற்கு கமல்ஹாசனின் திரைப்படம் இவ்வளவு வசூல் பெறுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – தயவு செஞ்சு கல்யாணதுக்கு வந்துராதீங்க…நயன்தாரா இப்படி செய்தது யாரிடம் தெரியுமா?….

vikram_mian_cine

இத்திரைப்படம் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கான மாயாஜால் திரையரங்கில், கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் சுமார் 100 காட்சிகள் திரையிடப்பட்டதாம். அதன் மூலம் சுமார் 80 லட்சத்திற்கும் அதிகமாக வசூல் அன்று ஒரு நாள் மட்டுமே கிடைத்துள்ளதாம்.

உண்மையில் திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் பேயாட்டம் ஆடி வருகிறதாம் விக்ரம். இதனால் தயாரிப்பாளர் நடிகர்  கமல்ஹாசன் அவர்களுக்கு இதுவரை மட்டுமே சுமார் 100 கோடிக்கும் அதிகமாக லாபம் கிடைத்துவிடும் என்று சினிமா வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது. வரும் வரங்களில் இந்த லாபம் இன்னும் அதிகமாகும் என கூறப்படுகிறது.

author avatar
Manikandan
Continue Reading

More in Gossips

To Top