×

ஒரே படத்தில் மூன்று கதாநாயகிகள்.. மூவருமே வில்லிகளாம்!

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் 'விக்ரம்'.இதில் கமலஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.
 
vikram movie

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் 'விக்ரம்'.இதில் கமலஹாசன் ஹீரோவாக நடிக்கிறார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி மற்றும் மலையாள நடிகர் ஃபகத் பாசில் ஆகியோர் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம். ராஜ்கமல் பிலிம்ஸ் மூலமாக இப்படத்தை தயாரிக்கிறார் கமல். இந்தப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு காரைக்குடி பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. விருமாண்டி படத்தின் போஸ்டர் போலவே அமைக்கப்பட்டிருந்த இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது.

Kalidass
Kalidass

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட 5 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. கதைப்படி இதில் அவருக்கு மொத்தம் மூன்று ஜோடிகலாம். அவருக்கு ஜோடியாக இதில் விஜய் டிவி புகழ் ஷிவானி, 'மைனா' நந்தினி, மற்றும் தொகுப்பாளர் மஹேஸ்வரி ஆகியோர் நடிக்கிறார்கள்.இதில் மூவருமே வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. சமீபத்தில் காரைக்குடியில் நடைபெற்றுவரும் இதன் படப்பிடிப்பில் ஷிவானி, நந்தினி இருவரும் கலந்துகொண்டனர். இவர்கள் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி இணையத்தில் வைரலானது.

VJ Maheswari
VJ Maheswari

இதில் கமல் மற்றும் பகத் பாசிலுக்கு ஜோடியாக நடிப்பவர்கள் பற்றிய எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இந்த படத்தையும் சேர்த்து மொத்தம் 15க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி.

From around the web

Trending Videos

Tamilnadu News