Categories: Cinema News latest news

சூர்யா குடும்பத்தை காப்பி அடிக்கும் விக்ரம்.! இத செஞ்சுதான் ஆகணும்.!

கார்த்திக்கு கடைக்குட்டி சிங்கம் எனும் மெகா ஹிட் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ். இந்த படத்தை அடுத்து சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த நம்ம வீட்டு பிள்ளை எனும் திரைப்படத்தை இயக்கி ஹிட் கொடுத்தார். இதனால் சன் பிக்ச்சர்ஸ் குழுவின் குட் புக்கில் இணைந்தார்.

அடுத்ததாக, விஜய், ரஜினி, சூர்யா என முன்னணி ஹீரோக்களுக்கு சன் பிக்ச்சர்ஸ் மூலம் கதை கூறினார் இயக்குனர் பாண்டிராஜ். அதில் ஒன்று தான் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன். இந்த திரைப்படமும் சூப்பர் ஹிட்டாகவே மீண்டும் சன் பிக்ச்சர்ஸ்க்கு ஒரு படம் இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் பாண்டிராஜ்.

அதே போல, வெகு நாட்களாக கிராமத்து கதைகளில் நடிக்காமல் இருந்து வரும் விக்ரம், சன் பிக்ச்சர்ஸ் தயாரிப்பில் ஒரு படம் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். தற்போது வீக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பு பாண்டிராஜ் பக்கம் சென்றுள்ளதாம்.

இதையும் படியுங்களேன் – இதில் தலையிட்டால் உன்னை கொலை செய்துவிடுவேன்.! வந்து நின்னவரு விஜயகாந்த் தான்.!

ஒருவேளை இது உறுதியானால், சூர்யா , கார்த்திக்கு ஒரு பெரிய ஹிட் கொடுத்தது போல விக்ரமுக்கு பாண்டிராஜ் ஒரு பக்கா கிராமத்து சூப்பர் ஹிட் கதையை கொடுத்துவிடுவார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

ஆனால், விக்ரமுக்கு ஏற்கனவே கதை கூறி மாரி செல்வராஜ் மற்றும் பி.எஸ்.மித்ரன் ஆகியோர் காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Manikandan
Published by
Manikandan