Categories: Cinema News latest news

போடு தகிட தகிட…விக்ரம் 3-க்கு பிளான் போடும் கமல்ஹாசன்….ஹீரோ யார் தெரியுமா?…

தற்போது தமிழ் சினிமாவிற்கு இது நல்ல காலமா அல்லது கெட்ட காலமா என தெரியவில்லை. எதிர்பார்ப்பை எகிற வைத்து, ட்ரைலரில் ரசிகர்களை கவர்ந்து வரும் பெரிய ஹீரோ படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெற தருகின்றன. ஆனால், யாருமே  எதிர்பார்க்காத, டாக்டர், மாநாடு, டான் ஆகிய நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மிக பெரிய வெற்றியடைகின்றன.

பெரிய ஹீரோ படங்கள் தொடர்ந்து எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை என கூறி வரும் சொல்லை தவிர்க்க தற்போது இருக்கும் ஒரே நம்பிக்கை கமல்ஹாசனின் விக்ரம் தான். லோகேஷ் இயக்கியுள்ள இந்த படத்திற்கு இந்திய அளவில் நல்ல எதிர்பார்ப்பு இருக்கிறது.

விக்ரம் படம் அண்மையில் வெளியான தகவலின் படி, கமல்ஹாசன் நடித்து 1986ஆம் ஆண்டு உருவான விக்ரம் படம் முதல் பாகம் என்றும், அதில் போலீஸ் அதிகாரியாக கமல் நடித்திருப்பார். தற்போது வரப்போகும் விக்ரம் படத்தில் கமல் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளாராம். இந்து இரண்டாம் பாகம் என கூறப்படுகிறது.

இதையும் படியுங்களேன் – அந்த இடத்தில் சூர்யாவுக்கு ஏற்பட்ட அவமானம்.! பொதுமேடையில் கலங்கி நின்ற சிவகுமார்.!

இந்த படத்தில் சூர்யா சிறிய கௌரவ தோற்றத்தில் நடித்து உள்ளார். இதனை இயக்குனரே சொல்லிவிட்டார். சூர்யாவின் கதாபாத்திரமானது இரு காட்சியில் விக்ரம் படத்தின் 3வது பாகத்தை தொடங்கி வைக்கும் வண்ணம் அமைந்து இருக்குமாம். விக்ரம் 3வது பாகம் 2024இல் தயாராகும் என தகவல் வெளியாகியுள்ளது. அதில் சூர்யா நடிக்க தான் அதிக வாய்ப்பிருக்கிறது என்கிறது கோலிவுட் வட்டாரம்.

Manikandan
Published by
Manikandan