Categories: Cinema News latest news

இத பாத்துட்டு என் மகன் ரெம்ப வருத்தப்பட்டான்.! உண்மையை உளறிய சியான்.!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சியான் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ள திரைப்படம் மகான். இந்த திரைப்படத்தை மாஸ்டர் பட தயாரிப்பாளர் லலித் குமார் தயாரித்துள்ளார்.

இப்படத்தை தியேட்டரில் ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்தனர். ஆனால், அவர்கள் எண்ணத்தை பொய்யாக்கி இத்திரைப்படம் அமேசான் OTT தளத்தில் வரும் 10ஆம் தேதி வெளியாக உள்ளது.

இதையும் படியுங்களேன் – சிம்புவின் நண்பருக்கு இவ்வளவு திறமையா?! உலக சினிமாவையே மிரள வைத்துவிட்டார்.!

இந்த படத்தை தியேட்டரில் ஸ்பெஷல் ஷோவாக விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் மற்றும் பலர் பார்த்துள்ளனர். அதனை பார்த்த துருவ் இடைவெளியின் போது ரெம்ப வருத்தப்பட்டாராம்.

இந்த படம் தியேட்டருக்கு வந்திருந்தால் ரசிகர்கள் கொண்டாடி இருப்பர். ஆனால், இப்படம் அதனை மிஸ் செய்துவிட்டது என கூறினாராம். இந்த தகவலை விக்ரம் அண்மையில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.

இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து உள்ளார். சிம்ரன், பாபி சிம்ஹா, வாணி போஜன் என பலர் நடித்துள்ளனர்.

Manikandan
Published by
Manikandan