Categories: Cinema News latest news

தாய்மாமன் உறவை கிழித்தெறிந்த விக்ரம்!.. சீயானுக்கும் தியாகராஜனுக்கும் இதுதான் பிரச்சினையா?..

தமிழ் சினிமாவில் இன்று எந்த அளவுக்கு நடிகர் விக்ரம் ஒரு முன்னனி நடிகராக ரசிகர்களால் கொண்டாடப்படுகிறாரோ அதே ரசிகர்களை கவர்வதற்கு அவர் பட்ட அடிகள் ஏராளம். பிரபல நடிகரின் மகன் என்பதையும் தாண்டி சினிமாவில் எப்படியாவது சாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் சினிமாவில் அடியெடுத்து வைத்தார் விக்ரம்.

vikram1

ஆனால் அவரின் ஆரம்பகால சினிமா பயணம் சொல்லும்படியாக இல்லை. அதனை அடுத்து சேது படம் தான் விக்ரமின் வாழ்க்கையில் ஒளியேற்றி வைத்த படமாக அமைந்தது. இந்த நிலையில் விக்ரமின் ஆரம்பகால சினிமா கெரியரை மிகவும் சிரமமாக மாற்றியது பிரசாந்த் மற்றும் அவரது தந்தை தியாகராஜன் தான் என அப்போதைய பத்திரிக்கைகளில் செய்திகளாக வந்தன.

சொந்த வாழ்க்கையில் விக்ரமின் தாய்மாமா தான் தியாகராஜனாம். தன் அம்மாவின் அண்ணனான தியாகராஜன் குடும்பமும் விக்ரம் குடும்பமும் ஏதோ சில பல காரணங்களால் பேசுவதே இல்லையாம். அதனால் கூட இடையில் பிரசாந்தின் சரிவுக்கு காரணம் விக்ரம் தான் என்று தியாகராஜன் நினைக்கிறார் என பல பத்திரிக்கைகளில் வெளிவந்தன.

vikram2

அதே போல ஆரம்பத்தில் விக்ரமின் வளர்ச்சிக்கும் தியாகராஜன் முட்டுக்கட்டையாக இருக்கிறார் என்றும் கூறினார்கள். இந்த நிலையில் திரைப்பட இயக்குனர் ராசி அழகப்பன் இதை பற்றி தனது யுடியூப் சேனலில் கூறும் போது விக்ரமுக்கு தியாகராஜனுக்கும் இடையே இருந்த பிரச்சினைக்கு காரணம் விக்ரம் வீட்டில் நடந்த ஒரு காதல் விவகாரம் தான் என்று கூறினார்.

இதையும் படிங்க : மீண்டும் இயக்குனராக களமிறங்கும் பாரதிராஜா… படத்தின் டைட்டில் என்ன தெரியுமா?

ஆனால் அது யாரைப் பற்றி கூறினார் என்று தெளிவாக கூறவில்லை. ஆனால் அந்த காதல் விவகாரம் தான்  இன்று வரை மிகப்பெரிய அளவில் விஸ்வரூபம் எடுத்து இருவர் தரப்பிலும் பேசாமல் இருந்து வருகிறார்கள் என்று கூறினார்.

Published by
Rohini