Categories: Cinema News latest news

வேலை முடிந்ததும் சகோதரி என சொல்லிடுவார்.. பலே கில்லாடி நம்ம சியான்.! பிரபல நடிகை ஓபன் டாக்…

தமிழ், தெலுங்கு, கன்னட மொழி திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சதா. தெலுங்கில் அவர் நடித்த ஜெயம் திரைப்படம் ஹிட் அடித்த நிலையில், தமிழில் அப்படத்தின் ரீமேக்கான ‘ஜெயம்’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமானார். அவரின், நடிப்பு தமிழ் சினிமாவில் பேசப்பட்டதால் தமிழில் தொடர்ந்து நடிக்க அவருக்கு பட வாய்ப்புகள் கிடைக்க தொடங்கியது.

அந்த வகையில் தான் முன்னணி நடிகராக இருக்கும் சீயான் விக்ரம் உடன் ‘அந்நியன்’ படத்தில் நடித்தார். மேலும், அந்நியன் படத்தில் இவரக்ளது இருவரின் நடிப்பும் மிகவும் ரசிக்கப்பட்டது மட்டும்மில்லாமல், திரைப்படதிற்கும்நல்ல வரவேற்பு கிடைத்தது.

அதுபோல், ‘அந்நியன்’ படத்தில் இவரக்ளது ஜோடி மற்றும் கெமிஸ்ட்ரி மிகவும் பேசப்பட்டது. படத்தில் ஜோடி மிகவும் பொருத்தமாக இருந்ததாக விமர்சிக்கப்பட்டதோடு படத்தில் இருவரின் ரோமன்ஸ் காட்சிகளும் மிகவும் பேசப்பட்டது.

இதையும் படிங்களேன் – சிம்புவுக்கு டாட்டா.! சிவகார்த்திகேயனுக்கு ஓகே.! வாரிசு நடிகை செமகெட்டி…

அண்மையில், அந்நியன் படம் குறித்து பேசிய நடிகை சதா ஒரு சுவாரசியமான தகவலை பகிர்ந்து கொண்டார். அதாவது, இப்படத்தில் வரும் ரோமன்ஸ் காட்சிகளின் ஷூட்டிங் போது நாங்கள் இருவரும் நன்றாக செய்து முடித்துவிடுவோம்.

 

ஆனால், அந்த கசிட்சிகள் முடிந்ததும் சியான் விக்ரம் என்னை சகோதரி என்று தான் அழைப்பார், இதை பார்த்து ஷூட்டிங்கில் இருக்கும் சக கலைஞர்கள் அனைவரும் சிரிப்பார்கள், அப்போது எனக்கும் சிரிப்பு வந்துவிடும் என்று தெரிவித்தார்.

Manikandan
Published by
Manikandan