Categories: Cinema News latest news throwback stories

25 வருடம் கழித்து வெளியான ரகசியம்.! மணிவண்ணனை கட்டுப்படுத்திய ஒரே நபர் இவர்தானாம்.!

1997ஆம் ஆண்டு வெளியான சூரியவம்சம் திரைப்படத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. தற்போது வரை 2K கிட்ஸ் வரையில் மீம்ஸ் டெம்ப்லேட் வரையில் அந்த திரைப்படம் பிரபலமாகி உள்ளது.

அந்த திரைப்படத்தை இயக்கிய விக்ரமன்  இந்த படம் பற்றிய பல சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் நடித்த இயக்குனர் நடிகர் மணிவண்ணன் பற்றியும் கூறியிருந்தார். அவர் கூறியாததாவ்து,

இயக்குனர் மணிவண்ணன், இயக்குனராக பல சிகரம் தொட்டவர். அவர்  இன்னும் சிறப்பாக இயக்கத்தில் இருந்திருந்தால் இந்தியாவில் சிறந்த இயக்குனர்களில் ஒருவராக இருந்திருப்பார். அவர் இதுவரை எந்த இயக்குனர் படத்தில் நடிகராக நடித்தாலும் அவரது பாணியிலேயே வசனங்கள் பேசுவார்.

இதையும் படியுங்களேன் – அஜித்தை பார்த்தாவது கொஞ்சம் திருந்துங்க.! ரசிகர்கள் நலனில் அக்கறை இல்லாத நடிகர்கள்.!

மணிவண்ணன் தனது பாணியில் தான் நடிக்கவும் செய்யவார். ஆனால் முதன் முறையாக சூர்யவம்சம் படத்தில் நான் என்ன கூறினேனோ அதனை மட்டுமே அப்படியே செய்து கொடுத்தார். மற்ற மணிவண்ணன் படங்களையும் இந்த படத்தையும் பார்த்தால் தெரியும். என கூறியிருப்பார். இதுவரை அப்படி மணிவண்ணன் இயக்குனர் சொல்வதை அப்படியே கேட்டதில்லை என கூறியிருப்பார்.

Manikandan
Published by
Manikandan