Categories: Cinema News latest news throwback stories

காசி படத்தால் விக்ரமுக்கு நேர்ந்த சோகம்… இதனால் தான் இப்படியோ!

விக்ரம் நடிப்பில் வெளியான காசி படம் பெரிய அளவிலான வெற்றியை பெற்றது. ஆனால், அது அவருக்கு இன்றும் ஒரு பிரச்சனையை உருவாக்கி விட்டு தான் சென்று இருக்கிறது.

தமிழ் சினிமாவில் ஒவ்வொரு படத்திற்கும் உடலை வருத்தி நடிக்கும் நடிகர்களில் முக்கியமானவர் விக்ரம். இவர் தில் படத்தில் போலீஸ் வேடம் ஏற்க இருந்தார். அதற்காக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து பெரிய அளவில் உடலை ஏற்றி வைத்தார். அப்படம் நல்ல வெற்றியை பெற்றது. தொடர்ச்சியாக அவருக்கு கிடைத்த படம் தான் காசி. இப்படத்தில் மெலிந்த தேகத்தில் கண் தெரியாத நபராக நடித்திருப்பார் விக்ரம்.

இதைப்போன்ற ஒரு கதாபாத்திரத்தினை தான் பூஜா நான் கடவுள் படத்தில் நடித்தார். அதற்கு அவருக்கு லென்ஸ் தான் வைக்கப்பட்டதாம். ஆனால், விக்ரமோ கண் தெரியாமல் நடிக்க வேண்டும் எனக் கூறியவுடன் ஓகே சொல்லிவிட்டார். ஆனால் அதன் பிறகு அவர் செய்தது தான் படக்குழுவினையே அதிர்ச்சி அடைய வைத்து இருக்கிறது. எந்த வித லென்ஸும் பயன்படுத்தாமல் கருவிழியினை அவரே மறைக்கும்படி பார்வையை வைத்து கொண்டார்.

இதையும் படிங்க: எல்லாம் விக்ரம் பார்த்த வேலை..ஓரங்கட்டப்பட்ட விஜய்…பொன்னியின் செல்வன் ட்ராப் ஆன கதை…

தொடர்ச்சியாக 55 நாட்கள் படப்பிடிப்பு சென்றதாம். அது முழுவதும் விக்ரம் தன் பார்வையை இப்படியே வைத்து நடித்தார். படப்பிடிப்பு முடிந்ததும் அவரது பார்வையே பறிபோனது. உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை எடுத்தனர். இதனை தொடர்ந்தே, விக்ரம் மீண்டும் பார்வை திறனை பெற்றார். இருந்தும் அவருக்கு கண்ணாடி போட்டால் தான் இன்னும் தெளிவு கிடைக்கும் என மருத்துவர்கள் கூறிவிட்டனராம். ஒரு படத்திற்காக தன்னை வெகுவாக அர்ப்பணிப்பதில் விக்ரமுக்கு நிகர் அவரே தான்.

இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைக்க ஹரிஹரன் எல்லா பாடல்களையும் பாடினார். தொடர்ச்சியாக வெளியிடப்பட்ட இப்படம் முதலில் பெரிதாக ஓடவில்லை. பின்னர், படக்கதை வெளியில் தெரிய துவங்கவே தியேட்டர்கள் அதிகரிக்கப்பட்டது. படமும் ப்ளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது குறிப்பிடத்தக்கது.

Shamily
ஊடகத்துறை பட்டதாரியான இவர் 5 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல்,வணிகம் மற்றும் லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
Shamily