Connect with us

Gossips

அவன் நடிச்ச படமா ஓடுச்சு.. நான் தான் ஹிட் மெஷின்.. ஹீரோவை விட அதிகமாக சம்பளம் கேட்கும் வில்லன்?

எந்த ஒரு படத்துக்கும் ஹீரோவுக்கு தான் அதிக சம்பளம் கொடுப்பது வழக்கம். ஆனால், இந்த முறை எனக்கு கூடுதல் சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என வில்லன் நடிகர் ஒருவர் அடம் பிடித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதற்கு காரணமே அந்த நடிகருடன் இணைந்து நடித்துள்ள டம்மி ஹீரோ தான் என கூறுகின்றனர். இயக்குனரான அந்த ஹீரோ சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரங்களில் நடித்து மிரட்டி வருகிறார்.

இதையும் படிங்க: விஜய்க்கு லோகேஷ்னா அஜித்துக்கு இவர்தான்! அடுத்த பட இயக்குனரை தட்டி தூக்கிய அஜித் – சம்பளத்துல தல எகிறிட்டாரே

பல ஹீரோக்களுக்கு தொடர்ந்து தோல்வி படங்கள் கிடைத்து வந்தால், இந்த வில்லன் நடிகரை தான் தேடிப்போய் நீங்கள் வந்தால்தான் அதிர்ஷ்ட தேவதை கூடவே வருகிறது என கூப்பிட்டு வந்து நடிக்க வைக்கின்றனர்.

அவரும் மிடாஸ் போல தொட்டதெல்லாம் பொன்னாக தொடர்ந்து தூள் கிளப்பி வருகிறார். இதுவரை சம்பள விஷயத்தில் பெரிதாக அக்கறை செலுத்தாமல் அந்த நடிகருக்கு நெருங்கிய நண்பர்கள் சிலர் தூபம் போட்ட நிலையில், அடுத்து ரிலீசாக உள்ள தனது படத்திற்கு கூடுதலாக சம்பளம் கேட்டிருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளன.

இதையும் படிங்க: ப்பா.. என்னவொரு ஃபீல் குட் பாட்டு!.. விஜய்யையும் த்ரிஷாவையும் இப்படி பார்த்து எவ்ளோ நாளாச்சு!..

அதிலும் ஹீரோவை விட தனக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட வேண்டும் என்றும், அதற்கு காரணமாக சமீபகாலமாக அந்த ஹீரோ நடித்த எந்த ஒரு படமும் ஓடவில்லை. அவருக்கு மட்டும் அவ்வளவு சம்பளம் கொடுத்துவிட்டு படத்தை ஓட வைக்கும் ஹிட் மெஷினான தனக்கு இவ்வளவு குறைவாக கொடுப்பது ஏன் என்கிற கேள்வியை முன் வைத்துள்ளாராம்.

வில்லன் நடிகரின் இந்த கேள்வி விவகாரமாக இருந்தாலும் நியாயமானதாக இருப்பதால், ஹீரோ நடிகருக்கு தெரியாமல், வில்லன் நடிகருக்கு பேசப்பட்டதை விட சற்றே கூடுதல் சம்பளத்தை கொடுத்திருப்பதாக தகவல்கள் கசிந்து உள்ளன.

author avatar
Saranya M
Continue Reading

More in Gossips

To Top