மறைந்த ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனர் ஜீவா இயக்கத்தில் வெளிவந்த உன்னாலே உன்னாலே திரைப்படம் மூலம் நடிகரானவர் நடிகர் வினய். அதன்பின் என்றென்றும் புன்னகை, ஒன்பதுல குரு,மோதி விளையாடு, ஆயிரத்தில் இருவர், அரண்மனை என சில திரைப்படங்களில் நடித்தார். சில வருடங்கள் கழித்து விஷால் நடித்து வெளியான துப்பறிவாளன் திரைப்படத்தில் அசத்தல் வில்லனாக நடித்திருந்தார்.
அதைத்தொடர்ந்து தற்போது வில்லன் நடிகராகவே அவர் மாறிவிட்டார். சிவகார்த்திகேயனின் டாக்டர் படத்திலும், சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்திலும் வில்லனாக நடித்திருந்தார்.
இந்நிலையில், இவர் நடிகை விமலா ராமனை காதலித்து வருவதாகவும், விரைவில் இருவருக்கும் திருமணம் நடக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
விமலா ராமன் கேரளாவை சேர்ந்தவர் தமிழில் ராமன் தேடிய சீதை, இருட்டு உள்ளிட்ட சில படங்களில் இவர் நடித்துள்ளார்.
வடிவேலு ஒரு…
TVK Vijay:…
நான் கைக்கூலி…
TVK Vijay:…
TVK Vijay:…