சிம்பு நடிப்பில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் 2011ஆம் ஆண்டு வெளியாகி தற்போது வரை இளைஞர்கள் மத்தியில் ரசிக்க கூடிய படங்களில் ஒன்றாக இருக்கிறது விண்ணைத்தாண்டி வருவாயா .இத்திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக திரிஷா நடித்து இருப்பார். இப்படம் அந்த சமயம் நல்ல வரவேற்ப்பை பெற்று நல்ல வெற்றியை பதிவு செய்தது.
ஆனால், இந்த திரைப்படம் சிம்புவுக்கு வருவதற்கு முன்னர் இரண்டு ஹீரோக்களிடம் சென்று வந்துள்ளதாம். முதல் ஹீரோ தனுஷ். அவரிடம் இந்த கதை கூறப்பட்டு இந்த படத்தின் நெகட்டிவ் கிளைமாக்ஸ் காரணத்தால் தனுஷ் இந்த படத்தில் இருந்து விலகி விட்டாராம். இதனை தனுஷ் – கௌதம் மேனன் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தனர்.
அதேபோல நடிகர் ஜெய்-க்கும் விண்ணைத்தாண்டி வருவாயா பட வாய்ப்பு வந்துள்ளதாம் . ஆனால் சில காரணங்களால் அது நடக்காமல் போய்விட்டது. இதனை ஜெய் ஒரு பேட்டியில் அண்மையில் குறிப்பிட்டிருந்தார்.
சிம்பு நடிப்பில் இந்த திரைப்படம் வெற்றி பெற்ற பிறகு, விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் தயாரானது. அதில் யார் நடிப்பார் என்று கேள்வி அப்போது எழுந்தது. அப்போது மாதவன் பெயர் அடிபட்டது. மாதவன் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் கூட அப்போது வைரலாக பரவியது.
இதையும் படியுங்களேன் – வருஷா வருஷம் அந்த சாமியாரை சமந்தா பார்த்துவிடுவாராம்.. காரணம் தெரியுமா.?!
அதேபோல் விண்ணைத்தாண்டி வருவாயா இரண்டாம் பாகம் கதை விஜய் சேதுபதியிடம் சொல்லப்பட்டதாம். ஆனால் அவர் தனக்கு இந்த கதை செட் ஆகாது என்று மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அண்மையில் ஓர் பிரபல பத்திரிகை யூடியூப் தளத்தில் வெளியானது.
Karur: தவெக…
STR49: சினிமாத்துறை…
Vijay TVK:…
Idli kadai…