Connect with us
vinothini

Cinema News

முட்டாள்களோட நடிக்கிறோமோனு தோணும்! – பெரிய நடிகர்கள் குறித்து ஓப்பன் டாக் கொடுத்த வினோதினி..!

தமிழ் சினிமாவில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் கூட சிறப்பாக தனது நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர் /நடிகைகள் உண்டு. அதில் முக்கியமானவர் நடிகை வினோதினி.

ஆண்டவன் கட்டளை, கேம் ஓவர், தலைமுறைகள் என பல படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடிப்பில் ஆக்‌ஷிடண்டல் ஃபார்மர் என்கிற இணைய தொடர் வெளியானது. சினிமாவிற்கு வந்த காலக்கட்டம் முதலே தனது நடிப்பு திறனை சிறப்பாக வெளிப்படுத்தி வருகிறார் வினோதினி.

Vinodhini-Vaidyanathan

Vinodhini-Vaidyanathan

அவர் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் நடிப்பை கற்றுக்கொண்டதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது. சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியபோதும் அஜித், கமல், ரஜினி மாதிரியான பெரிய கதாநாயகர்கள் படங்களில் இவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

நடிகர்கள் பொறுப்பு இல்லாமல் நடிக்கின்றனர்:

இதுக்குறித்து வினோதினி கூறும்போது, “என்ன செய்தால் அவர்களது படத்தில் நடிக்க அழைப்பார்கள் என தெரியவில்லை. பல படங்களில் அம்மா கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்கிறார்கள். நான் என்றைக்குமே ஹீரோக்களுக்கு அம்மாவாக நடிக்க மாட்டேன்” என வினோதினி தெரிவித்துள்ளார்.

Vinodhini-Vaidyanathan

Vinodhini-Vaidyanathan

நடிகர்களின் நடிப்பு குறித்து அவர் பேசும்போது “ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பிற்காக லட்சக்கணக்கில் செலவாகிறது. ஆனால் நடிகர்கள் பொறுப்பே இல்லாமல் இருக்கிறார்கள். நாளைக்கு ஒரு காட்சி உள்ளது என்றால் இன்றைக்கே அதற்கு தயாராகி வராமல், படப்பிடிப்பில் வந்து நின்று சொதப்புகிறார்கள்.

இதையெல்லாம் பார்க்கும்போது முட்டாளகளோட சேர்ந்து நடிக்கிறோமே என தோன்றும் என கூறியுள்ளார். பிடித்த நடிகர்கள் பற்றி கூறும்போது நடிகர் குரு சோமசுந்தரத்தின் நடிப்பு தனக்கு மிகவும் பிடிக்கும் என தெரிவித்துள்ளார் வினோதினி.

Continue Reading

More in Cinema News

To Top