×

சொந்த ஊரில் விவசாயம் செய்யும் பேட்ட வில்லன் - வைரல் வீடியோ !

பிரபல பாலிவுட் நடிகர்  நவாஸுதின் சித்திக் கொரோனா ஊரடங்கின் ஆரம்பத்தில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு மகாராஷ்டிரா மாநிலத்தில் புதனாவுக்கு குடும்பத்துடன் சென்றார்.  இவர் ரஜினிகாந்திற்கு வில்லனாக பேட்ட படத்தில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களிடையே பேமஸ் ஆனவர்.  தற்போது கிராமத்தில் இருந்தபடியே வயலில் விவசாய வேலை செய்யும் வீடியோவை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டு பலரது பாராட்டுக்களை பெற்று வருகிறார்.

 

இது குறித்து பேட்டி ஒன்றில் கூறிய அவர், "பலரும் தங்கள் மன அழுத்தத்தை குறைக்க ஆஷ்ரமம், ரிசார்ட் என செல்வார்கள். ஆனால், இங்கு அதெல்லாம் எனக்கு கிடைக்கிறது.  நான் இங்கு எப்போது வந்தாலும்  வயல்களில் தான் நேரத்தை செலவிடுவேன். கரும்பு சாப்பிடுவேன், டிராக்டர் ஓட்டுவேன் மற்றும் என் குழந்தை பருவ நண்பர்களுடன் எல்லாம் நேரத்தை செலவிடுகிறேன்.

என்னுடைய பாதி வாழ்க்கையை இங்கு தான் கழித்திருக்கிறேன். இப்படி நான் வயலில் வேலை செய்யும் போது நான் எவ்வளவு எளிமையாக என் வாழ்க்கையை தொடங்கினேன் என்பது என் நினைவுக்கு வரும் என கூறினார். இந்த வீடியோ தற்ப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. மிகப்பெரும் பிரபலமாக இருந்தும் எந்தவித பந்தாவுமின்றி நாள் முழுக்க விவசாயம் செய்யும் இவரை ரசிகர்கள் வெகுவாக பாராட்டியுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News