Connect with us

Cinema News

விஜய் சேதுபதியின் விசிட்டிங் கார்ட் இதுவா? லீக்கான மொபைல் எண்கள்… வைரலாகும் புகைப்படம்!..

Vijay Sethupathi: கோலிவுட்டில் எந்தவித பின்புலனும் இல்லாமல் யார் துணையும் இல்லாமல் எண்ட்ரியானவர் விஜய் சேதுபதி. சின்ன சின்ன கேரக்டரில் தொடங்கிய அவர் பயணம் இன்று பல மொழிகளில் தவிர்க்க முடியாத நபராகி இருக்கிறார். 

விஜய் சேதுபதி நடிப்பில் மட்டுமல்லாமல் சில படங்களை தயாரித்து இருக்கிறார். ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களிலும் பணியாற்றியுள்ளார். துபாயில் வேலை செய்து வந்த விஜய் சேதுபதி நடிப்பின் மீதிருந்த ஆர்வத்தால் சென்னைக்கு வந்தார்.

இதையும் படிங்க: விஜய் நடிக்க வேண்டிய படம்.. சிம்புவை வைத்து களமிறங்கும் இயக்குனர்! இது புது அப்டேட்டால இருக்கு

ஹீரோவாக தென்மேற்கு பருவக்காற்று திரைப்படத்தில் நடிக்கும் முன்னரே சில படங்களில் சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். 2012ல் சுந்தரபாண்டியன், பீட்சா மற்றும் நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சூது கவ்வும், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, பண்ணையாரும் பத்மினியும், காதலும் கடந்து போகும், இறைவி, விக்ரம் வேதா உள்ளிட்ட படங்களில் விஜய் சேதுபதியின் நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது.

கிடைத்த வாய்ப்பை எல்லாம் பயன்படுத்தி கொண்டார். ஒரு வருடத்தில் 8 படங்கள் வரை நடித்தார். ஒரு கட்டத்தில் ஹீரோவாக நடிக்கும் படங்கள் தொய்வை சந்திக்க வில்லன் அவதாரம் எடுத்தார். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் என்ற கோலிவுட்டின் சூப்பர்ஸ்டார்களுக்கு முன்னால் தன்னுடைய அசூர நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதையும் படிங்க: மே 1ல் பெரிய ட்ரீட்தான்.. அஜித் அனுமதிக்காக காத்திருக்கும் ‘விடாமுயற்சி’ டீம்! அதாவது நடக்குமா?

இறுதியாக பாலிவுட்டில் வெளியான ஜவான் படத்தில் வில்லனாக நடித்து வரவேற்பை பெற்றார். தற்போது பல மொழிகளில் பிஸியாக இருக்கும் விஜய் சேதுபதி நடிக்க வாய்ப்பு கேட்டு அச்சடித்து வைத்து இருந்த விசிட்டிங் கார்ட் வைரலாகி வருகிறது. ஒல்லியான தேகத்தில் தன்னுடைய பல மொபைல் நம்பர்களை உள்ளிட்டு இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

Continue Reading

More in Cinema News

To Top