×

பா ரஞ்சித்தின் அடுத்த படத்தில் அந்த நடிகர்? - சும்மா களை கட்டுமே!...

 
ranjith

அட்டக்கத்தி திரைப்படம் மூலம் இயக்குனரானவர் பா. ரஞ்சித். அடுத்து கார்த்தியை வைத்து அவர் இயக்கிய மெட்ராஸ் திரைப்படத்தில் அவர் எடுத்துக்கொண்ட அரசியல் பலரையும் திரும்பி பார்க்க வைத்தது. அதன்பின் ரஜினியை வைத்து அவர் இயக்கிய கபாலி திரைப்படம் அவரை முன்னனி இயக்குனர்களில் ஒருவராக மாற்றியது. மீண்டும் ரஜினியை வைத்து காலா எடுத்தார்.

ranjith

அதன்பின் ஆர்யா, பசுபதியை வைத்து அவர் இயக்கத்தில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை’ திரைப்படம் ரசிகர்களிடம் மெகா ஹிட் அடித்தது.  சார்பட்டா பரம்பரைக்கு பின் அவர் மீண்டும் அவர் ஒரு காதல் கதையை இயக்கி வருகிறார். இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ் நடித்து வருகிறார்.

ranjith
ranjith

இந்நிலையில், இப்படத்திற்கு பின் அவர் இயக்கவுள்ள புதிய் படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தை கிரீன்ஸ் டுடியோஸ் நிறுவன அதிபர் ஞானவேல் தயாரிக்கவுள்ளார். சமீபத்தில் ஞானவேல் ராஜா மற்றும் விக்ரமிடம் ரஞ்சித் கதை கூறியுள்ளார். அது இருவருக்குமே பிடித்துப்போனதால் இந்த பட வேலைகள் விரைவில் துவங்கும் எனத்தெரிகிறது.

vikram60
vikram

From around the web

Trending Videos

Tamilnadu News