×

1 போஸ்டுக்கு 3 கோடி வாங்கும் ப்ரியங்கா... விராட் கோஹ்லி எவ்வளவு தெரியுமா? தலையே சுத்திடும் உங்களுக்கு!!!

விராட் கோஹ்லிக்கு 19வது இடம் கிடைத்திருக்கிறது. 125 மில்லியன் பேர் கோஹ்லியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். 
 
virat_priyanka

திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள் என்று பலரும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார்கள். அதிக ஃபாலோயர்கள் கொண்ட பிரபலங்களுக்கு பணம் கொடுத்து தங்கள் நிறுவன தயாரிப்புகளை விளம்பரம் செய்யுமாறு கூறுகிறார்கள். அவர்களும் விளம்பரம் செய்கிறார்கள். 

அப்படி இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு அதிகம் சம்பாதிக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. Hopper HQ நிறுவனம் வெளியிட்டுள்ள அந்த பட்டியலில் திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் மற்றும் பிறரின் பெயர்கள் இருக்கிறது. அந்த பட்டியலில் ப்ரியங்கா சோப்ராவின் பெயர் இருக்கிறது. 

அந்த பட்டியலில் முதல் 30 இடங்களுக்குள் இரண்டு இந்தியர்கள் தான் இருக்கிறார்கள். அதில் ஒருவர் கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி, மற்றொருவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. ப்ரியங்கா சோப்ராவை இன்ஸ்டாகிராமில் 64 மில்லியன் பேர் பின் தொடர்கிறார்கள். 

அவர் இன்ஸ்டாகிராமில் ஒரு விளம்பர போஸ்ட் போட ரூ. 3 கோடி வாங்குகிறார். இன்ஸ்டாகிராமில் பணக்கார பிரபலங்கள் பட்டியலில் ப்ரியங்காவுக்கு 27வது இடம் கிடைத்திருக்கிறது. கடந்த ஆண்டு வெளியான பட்டியலில் ப்ரியங்கா 19வது இடத்தில் இருந்தார். 

விராட் கோஹ்லிக்கு 19வது இடம் கிடைத்திருக்கிறது. 125 மில்லியன் பேர் கோஹ்லியை இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கிறார்கள். அவர் ஒரு விளம்பர போஸ்ட் போட ரூ. 5 கோடி வாங்குகிறார். இன்ஸ்டாகிராம் பணக்கார பிரபலங்கள் பட்டியில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானா ரொனால்டோ முதலிடத்தில் இருக்கிறார். 

295 மில்லியன் ஃபாலோயர்கள் வைத்திருக்கும் அவர் ஒரு விளம்பர போஸ்ட் போட ரூ. 11 கோடி வாங்குகிறார். அந்த பட்டியலில் ஹாலிவுட் நடிகர் ட்வெய்ன் ஜான்சன், கைலி ஜென்னர், பாடகி டெய்லர் ஸ்விஃப்ட், அரியானா கிராண்ட் ஆகியோரின் பெயர்கள் உள்ளது. அமெரிக்காவில் கணவர் நிக் ஜோனஸுடன் வசித்து வரும் ப்ரியங்கா சோப்ரா தற்போது ஹாலிவுட்டில் பிசியாகிவிட்டார். 

மேட்ர்கிஸ் 4 படத்தில் நடிக்கும் ப்ரியங்கா விக்டோரியாஸ் சீக்ரெட்டின் பிராண்ட் அம்பாசிடராக அண்மையில் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஹாலிவுட்டில் பிசியாக இருந்தாலும் அவ்வப்போது பாலிவுட் படங்களிலும் நடிக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News