வேற லெவல் அஸ்...அஸ்வினுக்காக தமிழ் பேசும் விராட் கோலி... வைரல் வீடியோ

இந்தியா இங்கிலாந்து அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. மூன்றாவது நாளில் இங்கிலாந்து அணிக்கு 482 ரன்கள் டார்கெட்டை இந்திய அணி செட் செய்ய, அந்த அணி நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 53 ரன்கள் எடுத்திருந்தது. நான்காவது நாளான இன்று இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் ஜாலம் காட்டவே, அந்த அணி 54.2 ஓவர்களில் 164 ரன்களில் ஆட்டமிழந்தது. கடைசி கட்டத்தில் கேமியோ காட்டிய மொயின் அலி அதிகபட்சமாக 43 ரன்கள் எடுத்தார்.
இந்தியா தரப்பில் அதிகபட்சமாக அக்சர் படேல் 5 விக்கெட்டுகளும் ரவிச்சந்திரன் அஷ்வின் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சேப்பாக்கம் மைதானத்தில் சொந்த ரசிகர்கள் முன்னிலையில் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்த அஷ்வின், பேட்ஸ்மேன்களே தடுமாறிய இரண்டாவது இன்னிங்ஸில் சதமடித்து அசத்தியிருந்தார். இதையடுத்து, 8 விக்கெட்டுகள் மற்றும் சதமடித்த அஷ்வின் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
😉KOHLI: வேற லெவல்🔥வேற லெவல் Ash 🔥
— Star Sports Tamil (@StarSportsTamil) February 16, 2021
உண்மையாவே இது வேற லெவல் Video🏏📹
களத்தில் பந்துவீசி கொண்டிருக்கும் @ashwinravi99 ஐ தமிழ் வார்த்தை மூலம் Encourage செய்யும் @imVkohli & சக 🇮🇳 வீரர்கள்🥰#INDvENG pic.twitter.com/utnNoELgdK
இந்நிலையில், களத்தில் அஸ்வின் பந்துவீசும் போது, அவரை என்கரேஜ் செய்யும் விதமாக விராட் உள்ளிட்ட சில இந்திய வீரர்கள் தமிழில் பேசி இருக்கின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.