Nagabandham Box Office : 5 நாட்களில் விராட் கர்ணாவின் 'நாகபந்தம்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?

 
Nagabandham 5 days collection

5 நாட்களில் 'நாகபந்தம்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தெலுங்கு நடிகர் விராட் கர்ணா ஹீரோவாக நடித்திருக்கும் இரண்டாவது படம் தான் 'நாகபந்தம்'.

இப்படம் கடந்த ஜூலை 3-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் ரிலீஸ் ஆனது. மெகா பட்ஜெட் படமான இதை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கியிருக்கிறார்.

இதில் ஐஸ்வர்யா மேனன், நபா நடேஷ், ஜெகபதி பாபு, மகேஷ் மஞ்ச்ரேக்கர், முரளி ஷர்மா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இதனை 'NIK ஸ்டுடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ்' ஆகிய இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து தயாரித்துள்ளது.

இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களே வருகிறது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் கடந்த 5 நாட்களில் உலக அளவில் ரூ.14.85 கோடி வசூல் செய்துள்ளது.

From Around the web