Nagabandham Box Office : 6 நாட்களில் விராட் கர்ணாவின் 'நாகபந்தம்' செய்த வசூல் எவ்ளோ தெரியுமா?
Jul 9, 2026, 08:54 IST
6 நாட்களில் 'நாகபந்தம்' செய்த வசூல் தெரியவந்துள்ளது. தெலுங்கில் 'பெத்த காப்பு 1' என்ற படம் 2023-ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. இதன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் விராட் கர்ணா.
இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் 'நாகபந்தம்'. இந்த படத்தை இயக்குநர் அபிஷேக் நாமா இயக்கியுள்ளார்.
தெலுங்கு மொழி மட்டுமில்லாமல் தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் மலையாளத்திலும் கடந்த ஜூலை 3-ஆம் தேதி இப்படம் வெளியானது. இதில் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன் என டபுள் ஹீரோயின்ஸாம்.
அதிக பொருட்செலவில் இந்த படத்தை தயாரித்திருக்கிறது 'NIK ஸ்டுடியோஸ்' மற்றும் 'அபிஷேக் பிக்சர்ஸ்'. தற்போது, இப்படம் கடந்த 6 நாட்களில் உலக அளவில் ரூ.17.82 கோடி வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
