தர்மத்தை காப்பாற்றுவதற்காக பகவான் அவதாரம் எடுப்பார்... வெளியானது 'நாகபந்தம்' ட்ரெய்லர்!
Jun 20, 2026, 18:14 IST
தெலுங்கு நடிகர் விராட் கர்ணா நடித்துள்ள புதிய மெகா பட்ஜெட் படம் தான் 'நாகபந்தம்'. இந்த படம் தெலுங்கு மொழி மட்டுமின்றி, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் உருவாகியுள்ளது.
இதில் முக்கிய வேடங்களில் நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், மகேஷ் மஞ்ச்ரேக்கர், ஜெகபதி பாபு, முரளி ஷர்மா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
இந்த படத்துக்கு கதை, திரைக்கதை எழுதி, இயக்கியுள்ளார் அபிஷேக் நாமா. இதனை 'NIK ஸ்டுடியோஸ் - அபிஷேக் பிக்சர்ஸ்' நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.
தற்போது, இதன் ட்ரெய்லரை ரிலீஸ் செய்துள்ளனர். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தை வருகிற ஜூலை மாதம் 3-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.
